Advertisment

மலிவு விலையில் மத்திய அரசு மருந்துகள்: உங்க அவசரத்திற்கு ஆன்லைனில் ‘புக்’ செய்யுங்க!

Jan Aushadhi கிடங்குகள் முழுத் திறனுடன் செயல்படுகின்றன, மேலும் ஊழியர்களுக்கான உள் குடியிருப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendras, PMBJK, Janaushadhi, Janaushadhi news, Janaushadhi news in tamil, Janaushadhi latest news, Janaushadhi latest news in tamil, medicine, whatsapp, email, medicines

corona virus, lockdown, Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendras, PMBJK, Janaushadhi, Janaushadhi news, Janaushadhi news in tamil, Janaushadhi latest news, Janaushadhi latest news in tamil, medicine, whatsapp, email, medicines

Generic Medicines: ஊரடங்குக்கு மத்தியில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendras(PMBJK) மருந்துகளுக்கான ஆர்டர்களை வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஏற்றுக் கொள்கின்றனர். இதை தொடர்ந்து பதிவேற்றப்பட்ட மருந்து சீட்டுகளின் அடிப்படையில் நோயாளிகளின் வீட்டு வாசலில் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த புதிய நடவடிக்கை, பயனர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதில் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு உதவுகிறது. PMBJK கள் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் உட்பட சமூக ஊடக இயங்கு தளங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மருந்துகளை தேவைப்படுவோருக்கு விரைவாக வழங்குவதில் சிறந்த சேவையளிக்கிறது, என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா கூறியுள்ளார். PMBJK கள், Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana ( PMBJP) கீழ் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில் நாட்டில் உள்ள 726 மாவட்டங்களில் இயங்குகின்றன 6300 PMBJK கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை விநியோகிப்பதை உறுதி செய்கின்றனர். இந்த மருந்துகள் சராசரியாக 50% முதல் 90% வரை மலிவானவை. ஏப்ரல் 2020 ல் ரூபாய் 52 கோடி மதிப்பிலான மருந்துகள் நாடுமுழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, இந்தியா போஸ்டுடன் இணைந்து தொலைதூரத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் Bureau of Pharma PSUs of India(BPPI) தனது விற்பனையாளர்களுக்கு மூலப்பொருட்கள் மற்றும் தளவாடங்களுக்கான மூலதன சிக்கல்களை தீர்ப்பதற்காக உரிய தேதிக்குள் பணம் செலுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் BPPI அதிகாரிகளைக் கொண்ட அர்பணிக்கப்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Jan Aushadhi கிடங்குகள் முழுத் திறனுடன் செயல்படுகின்றன, மேலும் ஊழியர்களுக்கான உள் குடியிருப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்ப்பதற்காக BPPI யின் உதவி எண்கள் வேலை செய்கின்றன.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை பராமரிக்க BPPI ஏப்ரல் மாதத்தில் வேகமாக விற்பனையாகும் 178 மருந்துகளுக்கு எம்ஆர்பி ரூபாய் 186.52 கோடியில் வாங்குவதற்கான உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment