Advertisment

கொரோனா வைரஸ் என்றால் என்ன... அதன் பாதிப்பு உள்ளிட்ட முழு விபரங்கள் இதோ....

Coronovirus in India : இந்தியாவில் சிலருக்கு இந்த பாதிப்பிற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus in india, coronavirus causes, coronavirus treatment, coronavirus symptoms, coronavirus causes in india, coronavirus infection

சீனாவில் புதிய வகை வைரஸால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இது வைரல் நிமோனியா போன்று, எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பில் சிக்கி பலியாகியுள்ளனர். சமீபத்திய தகவலின்படி, இந்த வைரஸிற்கு novel coronavirus (nCoV) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் சிலருக்கு இந்த பாதிப்பிற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் என்றால் என்ன

வைரஸ்களின் தொகுப்பான கரோனா வைரஸ், விலங்குவழி நோய்களின் மூலம் உருவாகிறது. இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. இந்த வைரஸ், மனிதர்களிடையே, சுவாசபாதையில் பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதன் பாதிப்பு மிகக்கடினமானதாக இருக்காதபோதிலும், சீனாவின் வுஹான் பகுதியில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இதன்பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவின் உதவியை நாடுகிறது சீனா

சீனாவை மிரட்டும் கொரோனா வைரஸ் - இந்திய மாணவர்கள் கடும் பாதிப்பு : பெற்றோர்கள் பரிதவிப்பு

சுவாச பாதையில் ஏற்படும் பிரச்னைகளே கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறியாக உள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெ்றிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வெளியூர், வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள், உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தாங்கள் சென்று வந்த நாடுகளின் விபரங்கள், அங்கு எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட விபரங்களை தந்து சிறந்த டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் எங்கு முதன்முதலில் தோன்றியது

novel coronavirus (nCoV), சீனாவின் வுஹான் பகுதியில் செயல்படும் கடல் உணவுகள் சந்தைகளின் மூலமே உருவானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த சந்தையில் தான் வனவிலங்குகள், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸிற்கும், இதற்கு முந்தைய வெர்சன் கொரோனா வைரஸிற்கும் இடையிலான வேற்றுமைகளாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறியதாவது, இந்த வைரஸ், பாம்புகளின் மூலமாக உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் கிழக்கு ஆசிய பகுதியின் மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியயதாவது, இந்த புதிய கொரோனா வைரஸ், நோவல் கொரோனா வைரஸ் 2019 என்றும் அழைக்கப்படுகிறது. சீனாவில், இதன் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், சர்வதேச அளவில் இதற்காக அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

கெரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்

உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள கொள்கைகளின்படி, கொரோனா வைரஸ் குறிப்பாக சுவாசப்பாதையில் கோளாறுகளையே ஏற்படுத்துகின்றன. சாதாரண சளி முதல் Middle-East Respiratory Syndrome (MERS) and the Severe Acute Respiratory Syndrome (SARS) ஏற்படுத்துகின்றன. சீனாவின் வுஹான் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளாவன. காய்ச்சல், சுவாசித்தலில் பிரச்னை, மார்பு பகுதியை ஆராய்ந்து பார்த்ததில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும், அதன் தீவிர பாதிப்பு குறித்து ஒரு முழுமையான முடிவுக்கு வர இயலவில்லை.

பெரும்பாலான கேஸ்களகல், இந்த வைரஸின் பாதிப்பு நிமோனியாக மாறி, தீவிர சுவாச மணடலத்தில் பிரச்னையாக உருமாறி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு இறுதியில் மரணத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சை

இந்த கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் 2019-CoV என்று பெயரிட்டுள்ள நிலையில், இதனை குணப்படுத்த இதுவரை எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதர்களிடத்தில் இந்த புதிய வைரஸ் தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வழக்கமான பரிந்துரைகளே தற்போதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கைகளை நல்ல நீரால் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல், வாய்ப்பகுதியை மூகமூடியால் மூடிக்கொள்ளுதல், இருமும்போதும் தும்மும்போதும் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மூடிக்கொள்ளுதல், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளை நன்கு சமைத்து சாப்பிடுதல். நோய்த்தொற்று உள்ளவர்களிடமிருந்து விலகி இருத்தல் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்றிருந்தால், தங்களுக்கும் சுவாசப்பாதையில் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தக்க டாக்டரை அணுகி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பயண விபரங்கள், அங்கு எடுத்துக்கொண்ட சிகிச்சை விபரங்கள் உள்ளிட்டவைகளை டாக்டரிடம் வழங்கி கலந்தாலோசிக்க வேண்டும் என்று போர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோயியல் பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் அனிதா மேத்யூ தெரிவித்துள்ளார்.

கைகள் உள்ளிட்ட உடலின் அனைத்து பகுதிகளையும் எப்போதும் தூய்மையாக வைத்திருத்தல்

சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருத்தல்

பாதிப்பு அறிகுறிகள் தென்படின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூகமூடிகளை அணிந்து கொள்ளுதல்

இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்குப்பகுதிகளை மூடிக்கொள்ளுதல்

சுவாசித்தலின் போது சளி, ரத்தம் ஏதும் வெளிவந்தால், உடனே கைகளை கழுவவேண்டும்

காய்ச்சல் மற்றும் ப்ளூ காயச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

சீனாவிற்கு செல்ல இருப்பவர்கள் அல்லது சென்று திரும்பியவர்கள் தங்கள் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தாலோ அல்லது அறிகுறிகளை உணர்ந்தாலோ உடனடியாக தக்க மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

India Coronavirus China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment