Advertisment

ஊரடங்கு நாட்களில் நம் வீட்டு பணியாள்களிடம் நன்றாக நடக்கிறோமா?

Domestic help in lockdown : நான் எனது வீட்டு வேலை உதவியாளருக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு சம்பளம் கொடுத்துள்ளேன். ஆனால் இனி தொடர்ந்து வழங்க விருப்பமில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, lockdown, domestic help, domestic help in lockdown, treating domestic help fairly, paying the domestic help, domestic help and rwa, , plight of domestic help, indian express, indian express news

coronavirus, lockdown, domestic help, domestic help in lockdown, treating domestic help fairly, paying the domestic help, domestic help and rwa, , plight of domestic help, indian express, indian express news

நாம் இப்போது நான்காவது கட்ட ஊரடங்கில் இருக்கும்போது, வீட்டு வேலை உதவியாளர்களை திரும்ப வேலைக்கு அழைத்துக்கொள்ளலாமா? சிலர் இப்போது வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கி வருவதாக கூறுகிறார்கள். சிலர் வேலையும் இல்லை, பணமும் கொடுப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

Advertisment

முதல் ஊரடங்குக்கு சில நாட்கள் முன்னதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் ஒரு பெண் சத்தமாக, தனது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் கத்திக்கொண்டிருந்தது படம் பிடிக்கப்பட்டிருந்தது. அவர் தனது வீட்டுவேலைகளை செய்வதற்காக, தனது உதவியாளரை அழைத்து வருவதற்கு, காரை எடுத்துக்கொண்டு, வீட்டைப்பெருக்கி சுத்தம் செய்வது எனது வேலை கிடையாது என்று கத்திக்கொண்டே செல்வார். அந்த வாக்குவாதம் சிறிது நேரம் தொடரும். அவரது காவலாளி அவருக்கு வழி விடும் வரை கத்திக்கொண்டிருப்பார். அதனுடன் வீடியோ காட்சி நிறைவடையும்.

இதுகுறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, அவரை நெட்டிசன்கள் கடுமையாக திட்டி பதிவிட்டிருந்தனர். எல்லா வசதிகளையும் பெற்றவர் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு சிலர் கெட்டவார்த்தைகளால் அவருக்கு எதிராக வசை பாடியிருந்தார். ஆனால் அவர் விரக்தியில் கத்தியதை நாம் இல்லை என்று சொல்ல முடியாது.

அவர் அவ்வளவு சிடுசிடுப்புடன் இருப்பதற்கு காரணம் என்னவாக இருந்திருக்கும்? மற்ற வேலைகளையும் செய்துகொண்டே, அவர், அவரின் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை தற்போது உள்ளதாலா? வீட்டை சுத்தம் செய்யும் வேலைளையும் நாமே செய்ய வேண்டும் என எண்ணியதாலா? இரண்டுமே காரணமாக இருக்கலாம். ஒருவேளை அவர், தனது வீட்டின் உதவியாளருக்கு நோய் தொற்று ஏற்படாது என்று எண்ணியிருக்கலாம்.

நாம் ஏற்கனவே நான்காவது கட்ட ஊரடங்கில் இருக்கிறோம். சில இடங்கள் மூடியிருக்கிறது மற்றும் சில இடங்கள் திறந்திருக்கின்றன. பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதி என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் அரசு சில விலக்குகளை அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக உள்ளன. வீட்டுக்குத்தேவையான உதவிகள் மட்டும் கிடைக்கின்றன. உள்துறை அமைச்சகம் வழங்கிய தேசிய வழிகாட்டுதல்படி தடைசெய்யப்பட்ட பகுதி தவிர மற்ற பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் வெளியில் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு வேலைகளுக்கு இன்னும் முழுமையாக அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பின்பற்றப்படுகிறது. மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வீட்டு வேலைகளுக்கு உதவுபவர் கூறுகையில், நான் மேற்கு கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பல வீடுகளில் வேலை செய்து வந்தேன். இரண்டு குடும்பங்களை தவிர மற்றவர்கள், என்னை வேலைக்கு திரும்ப அழைக்கவில்லை. ஊரடங்கு இருந்ததால், நான் வேலை செய்யாத நாட்களுக்கு பணம் கொடுப்பதற்கும் மறுத்தனர். இது எவ்வாறு எனது தவறாகும். நான் எனது வேலையை தொடர வேண்டும். நான் வேலை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் என்னை கேட்டுக்குள்ளேயே அனுமதிப்பதில்லை. நான் வேலை செய்யாத நாள் முதல் தொடர்ந்து எனக்கு பணம் கொடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மாலதியைப்போல் பல வீட்டு உதவியாளர்கள், குடியிருப்பு நலச்சங்கம் மூலம் திருப்பியனுப்பப்பட்டுவிட்டனர். இது அவர்களுக்கு பெருந்துன்பத்தை கொடுக்கிறது. இதனால், அவர்களின் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. வீட்டு உதவியாளர்கள் குறைந்தளவு சம்பளத்திற்கே பணி செய்பவர்கள். சில நேரங்களில் மொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் நபராகவே இருக்கின்றனர். மாலதி தனது இரண்டு மகன்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதில் ஒருவன் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை. அவரின் கணவருக்கு நிரந்தரமான வேலையும் கிடையாது. அவருக்கு ஏற்கனவே வேலை வழங்கிய இரண்டு குடும்பத்தினர், அவரை திரும்ப அழைக்கின்றனர். அவருக்கு சம்பளம் கொடுக்கவும் முன்வந்துள்ளனர். ஆனால் குடியிருப்பு நலச்சங்கம் அதனை மறுக்கிறது.

குடியிருப்பு நல சங்கத்தினரின் வாட்சப் குரூப்பில், ஒருவரை ஒன்று அல்லது இரண்டு வீடுகளில் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கலாம். இங்குள்ளவர்களின் ஆரோக்கியம் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டும். வீட்டிற்கு உதவி செய்ய வருபவர்களுக்கு தொற்று இருந்தால், என்ன செய்வது என்று ஒரு நபர் கேள்வி கேட்டிருக்கிறார்.

குடியிருப்பு நலச்சங்கம் என்ன மாதிரியான பங்கு வகிக்கும்?

குடியிருப்பு நலச்சங்கம் அரசை மிஞ்சிய அமைப்பு கிடையாது. நாடு முழுவதும், பெரும்பாலான குடியிருப்பு நலச்சங்கத்தினர் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருபவர்களை தடுக்கிறார்கள். மார்ச் மாதத்தில் பிரதமர் அறிவித்த ஒரு நாள் ஜனதா ஊரடங்கு அன்றே, வீட்டு வேலை உதவியாளர்களுக்கு விடுப்பளிக்க மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். ஆனால் தொற்று அதிகரித்து வரவே, மக்கள் வீட்டு வேலை உதவியாளர்களை முழுவதும் பணிக்கு வர வேண்டாம் என வலியுறுத்தினர். அந்த வீடியோவில் இருந்த பெண் கூறியதைப்போல், அவர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கி போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, வீடுகளில் உதவி செய்ய அனுமதிக்கலாம் என்று பல பெண்கள் அறிவுறுத்தினர். மேலும் வீடுகளில் வேலை செய்யவும் அனுமதித்தனர்.

 

publive-image

ஆனால், அரசு இப்போது வீடுகளில் உதவி செய்பவர்கள் உள்ளிட்ட, எந்த பணி செய்பவர்களையும் தடுக்கவில்லை. ஆனால், குடியிருப்பு நலச்சங்கங்கள் அதை செய்கின்றன. அது, நாம் அனைவரும் தேவையில்லாமல் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்களை மட்டுமே சார்ந்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

பெங்களூரில் 13 வயதே ஆன ஆரிக் பால், இப்போது வரை தனது பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வருகிறார். இது அவருக்கு ஆண்டு கோடை விடுமுறையாக இருந்தபோது கூட அவர் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார். தற்போது நமக்கு வீட்டு வேலை உதவியாளர்கள் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. ஒரு நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்வதற்குள் நாம் எவ்வளவு எரிச்சலடைகிறோம். நமக்கு அதிக நேரமும் எடுக்கிறது. ஆனால் அவர்கள் நாள் முழுவதும் பல வீடுகளில் அதே வேலையை திரும்ப, திரும்ப செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள். நல்லவேளையாக ஆரிக்கிற்கு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டபோதே, அவரின் வீட்டு வேலைகளுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். ஆனால், அவரும் ஏற்கனவே அவர் வேலை செய்த பல வீடுகளிலிருந்து நிற்கவேண்டும். ஏனெனில் அவர்கள் அவரை மீண்டும் அழைத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கென்று முறையான சங்கங்கள் இல்லை. எனவே ஒரே இரவில் தூக்கியெறிய முடியும். எப்படி மக்கள் இப்போது சமாளிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

டெல்லியைச் சேர்ந்த சர்மிளா போசுக்கு, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்கள் மிகக்கடினமாக இருந்தது. பின்னர் அவருக்கு பழகிவிட்டது. முன்பு அவரின் வீட்டு வேலைகளில் உதவி செய்பவர், அவரின் 4 படுக்கை அறைகள் கொண்ட வீட்டை சுத்தம் செய்து, துடைத்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, பாத்திரங்களை கழுவி, காய்கறிகளை நறுக்கிக்கொடுத்துவிடுவார். ஆனால், தற்போது, அவரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. இப்போது தான் வீட்டில் வேலையில் உதவி செய்பவர்கள் நம் வாழ்வை எவ்வளவு எளிதாக்கியுள்ளனர் என்பது தெரிந்தது என்கிறார் சர்மிளா. எனக்கு வீட்டில் உள்ளவர்களும் உதவுவார்கள். எனது கணவரும், நானும் ஒருநாள்விட்டு ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்து துடைப்போம். தினமும் துடைப்பது சிரமமாக உள்ளது. பாத்திரங்களை உதவியாளர் வந்து பார்த்துக்கொள்வார் என்று போட்டு வைப்பதற்கு மாறாக உடனுக்குடனே கழுவி வைத்துவிடுகிறேன். சர்மிளா, அவரின் உதவியாளருக்கு பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்குகிறார். அவர் விரைவில் பணிக்கு திரும்புவார் என நம்புகிறார்.

வீட்டு வேலைகள் ஆரம்பத்தில் அவருக்கு அதிகம் இருந்தாலும், ஜெய்ப்பூரை சேர்ந்த பாருல் சர்மா (30) தனது திட்டமிடலில் சரியாக இருந்தார். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் நான் எனது உதவியாளரை மே மாதம் முடியும் வரை விடுப்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினேன். ஏனெனில், அவர் தொற்று பாதிப்பு அதிகமிருந்த பகுதியில் வசித்தார் என்பதால் என்று அவர் கூறுகிறார். பாருலும், அவரின் கணவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்துகொண்டனர். சமையல், சுத்தம் செய்வது என்று எல்லா வேலைகளையும் பகிர்ந்தே செய்தனர். வீடு முழுவதும் சரியான முறையில் இல்லைதான் என்றாலும், அதுகுறித்து நாங்கள் வருந்தவில்லை. நான் சில நாட்களுக்கு முன்னர் நினைத்தேன், எனது உதவியாளருக்கு நான் எவ்வளவு நன்றிகள் தெரிவிக்கவேண்டும். அவர் வந்தவுடன் எனது வீடு மீண்டும் பொலிவுபெறும். ஆனால், இதன் மூலம் ஒரு நன்மை நடந்துள்ளது. எனது சமையலறை திறன்கள் மேம்பட்டுள்ளது. இது எனது தாயாரை மகிழ்வித்துள்ளது என்று தெரிவிக்கிறார் விமான நிலைய ஊழியரான பாருல்.

பெரும்பாலானோர் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே தங்களின் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்களை வரவேண்டாம் என கூறிவிட்டனர். அவர்களே வீட்டு வேலைகளை செய்து சிரமப்பட்டனர். மேற்கு கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் 33 வயதான ஷைனி சட்டர்ஜி, ஒரு நிறுவனத்தில் செயலாளராக பணிபுரிகிறார். அவர் கூறுகையில், இது ஒரு வித்யாசமான அனுபவமாக உள்ளது. பெரும்பாலும் நாம் அனைவருமே வீட்டு வேலைக்கு மற்றொருவரை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்த ஊரடங்கு நம் வேலைகள் அனைத்தையும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் நாமே செய்துகொள்ள முடியும் என்று உணர்த்தியுள்ளது. சரியாக அனைத்து வேலைகளையும் செய்வதைவிட, முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு வேலையையும் செய்து முடித்து விடுகிறேன். எனது கணவரும் வீட்டிலிருந்து பணிபுரிவதால், எனக்கு வீட்டு வேலைகளுக்கும் உதவியாக உள்ளார். நாங்கள் இருவரும் வீட்டுவேலைகளை பகிர்ந்துகொள்கிறோம். எங்களின் மகளை பார்த்துக்கொள்வதற்கும் உதவுகிறார் என்றார். இவர் தனது வீட்டு வேலை உதவியாளருக்கு சம்பளமும் வழங்கியுள்ளார். ஆனால், எல்லோரும் இவரைப்போல் கருணைமிக்கவர்களாக இருக்கப்போவதில்லை.

டெல்லியைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி, பெயர் வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் கூறுகையில், நான் எனது வீட்டு வேலை உதவியாளருக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு சம்பளம் கொடுத்துள்ளேன். ஆனால் இனி தொடர்ந்து வழங்க விருப்பமில்லை. அவர் எந்த வேலையும் செய்யாதபோது நான் ஏன் அவருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கவேண்டும் என்று கேட்கிறார். நான் இரக்கமற்றவர் இல்லை. ஆனால், தொடர்ந்து பணம் அனுப்புவதற்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகைகளை நான் வழங்கிவிட்டேன். எனது வேலைகள் அனைத்தையும் நானே செய்துகொள்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment