Advertisment

கொரோனாவை தடுக்கும் இம்யூனிட்டி: உணவு மட்டுமில்லை... இந்த 9 விஷயங்களில் கவனம் செலுத்துங்க!

இந்த 9 விஷயங்களில் கவனம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
COVID-19 and immunity Nine simple things you can do to bolster health

COVID-19 and immunity: Nine simple things you can do to bolster health : ஆரோக்கியமாக இருப்பது தான் தற்போது நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா தொற்று ஏற்படாதவர்கள் அல்லது தொற்றில் இருந்து மீண்டவர்கள் என அனைவரும் ஆரோக்கியமாக, குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்க வேண்டும்.

Advertisment

துவரகாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அனில் லால் இந்த 9 விஷயங்களில் கவனம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

போதுமான உறக்கம் : போதுமான உறக்கமின்மை மன ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒரே மாதிரியாக பாதிக்கிறது. பெரியவர்கள் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இளையவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவுகள் : காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவை உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது.

ஆரோக்கியமான கொழுப்பு : ஆலிவ் எண்ணெய், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஒமேகா -3- கொழுப்பு அமிலங்களின் பிற மூலங்களையும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். ஆரோக்கியமான கொழுப்புகள் முட்டுகளுக்கு நல்ல உயவு தருகிறது. மேலும் ஆர்த்திரிட்டிஸ் போன்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

publive-image

புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுங்கள் : நோய் எதிர்ப்பு சக்தி என்றால் குடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே தயிர் மற்றும் யோகர்ட் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்க : உற்பத்தி அளவைக் காட்டிலும் கூடுதலாக தேவைப்படும் ஆக்ஸிஜன்; சமாளிக்குமா தமிழகம்?

புரோபயாடிக் சப்ளிமெண்ட்: புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியா சமநிலையுடன் தொடர்புடையது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உங்கள் உடலில் இயற்கையான ஆன்டிபாடிகளின் உற்பத்திக்கு புரோபயாடிக்குள அதிகம் தேவைப்படுகிறது, அவை ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

publive-image

சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள் : அளவுக்கு அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடாக்கள், பழச்சாறுகள் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருக்கின்றன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எந்தவொரு எதிர்மறையான விளைவுகளையும் தடுக்க, பழங்களில் உள்ளதைப் போன்ற இயற்கை சர்க்கரைகளை பரிந்துரை செய்வதோடு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களின் உட்கொள்ளுதலை குறைத்துக் கொள்ளவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மிதமான உடற்பயிற்சி: மிதமான உடற்பயிற்சி உங்களை வெளியில் ஃபிட்டாகவும், உட்புறத்தில் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். ஜிம்மில் நடைபயிற்சி, ஜாகிங், ஓட்டம், யோகா அல்லது தீவிர பயிற்சி மூலம் நீங்கள் மேற்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஹைட்ரேட்டடாக இருங்கள் : அதிக நோய் எதிர்ப்பு சக்திக்கு நீர் உட்கொள்ளல் அவசியம். குறிப்பாக கோடை மாதங்களில், நீரிழப்பு சாத்தியமாக இருக்கும்போது. நீரேற்றம் அளவு குறையாமல் இருக்க ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

மன அழுத்த நிலைகளை நிர்வகித்தல் : மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு மன அழுத்தம் ஒருபோதும் உதவாது. நீங்கள் தொழில்முறை அல்லது தனிப்பட்ட மன அழுத்தத்தை சந்திக்கிறீர்கள் என்றால், உங்கள் மனதை பதட்டத்திலிருந்து திசைதிருப்ப யோகா அல்லது உடற்பயிற்சியை நாட முயற்சிக்கவும். முதலில், இது பதட்டத்தை போக்க உதவும். நீண்ட காலமாக இதை நீங்கள் பின்பற்றும் போது, அதே நேர்மறை ஆற்றல் அதிக நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment