Advertisment

கொரோனா தடுப்பூசிக்கும், காது இரைச்சலுக்கு என்ன சம்பந்தம்? மருத்துவரின் பதில்!

கொரோனா நோயாளிகள் தங்கள் சுவை உணர்வை இழப்பதுபோலவே, இந்த வைரஸ் உள் காதையும் பாதிக்கிறது, கடுமையான சந்தர்ப்பங்களில் இது காது கேளாமையும் ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா தடுப்பூசிக்கும், காது இரைச்சலுக்கு என்ன சம்பந்தம்? மருத்துவரின் பதில்!

அக்டோபர் 2021 ஆய்வின்படி, கொரோனாவை ஏற்படுத்தும் SARS-CoV-2  வைரஸ், செவிப்புலன் மற்றும் சமநிலைக்கு முக்கியமான உள்காது உள்பட முடி செல்களை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Advertisment

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது( பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் போதனா மருத்துவமனை), மனித உள் காதுகளின் புதுமையான செல்லுலார் மாதிரிகளைப் பயன்படுத்தி, வயதானோரின் உள் காது திசுக்களுடன் இணைந்து வளர்த்தனர்.

காது தொடர்பான அறிகுறிகளான காது இரைச்சல், வெர்டிகோ மற்றும் லேசானது முதல் கடுமையான செவித்திறன் இழப்பு போன்றவற்றைப் புகார் செய்த 10 கொரோனா நோயாளிகள் அடங்கிய குழுவிடம், அவர்களின் திசு மாதிரிகளில் நோய்த்தொற்றின் வடிவம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளிகளில், அனைவருக்குமே otoacoustic emissions எனப்படும் ஓட்டோகோஸ்டிக் உமிழ்வு குறைந்திருந்தது அல்லது இல்லாமல் இருந்ததாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து மும்பை பாட்டியா மருத்துவமனையின் ENT அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் திவ்யா பிரபாத் கூறுகையில், ஒரு வருட காலத்தில், இந்த நிலைமை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். கொரோனா நோயாளிகள் தங்கள் சுவை உணர்வை இழப்பதுபோலவே, இந்த வைரஸ் உள் காதையும் பாதிக்கிறது, கடுமையான சந்தர்ப்பங்களில் இது காது கேளாமையும் ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

காது இரைச்சல் என்றால் என்ன?

காது இரைச்சல் (Tinnitus) என்பது எந்த வெளிப்புற மூலமும் இல்லாத நிலையில், உள் காதில் ஏற்படும் ஒலியைப் பற்றிய ஒரு உணர்வு.  இது ரிங் சத்தம், சலசலப்பு, இரைச்சல் அல்லது விசிலிங் போன்ற வடிவத்தில் மென்மையாகவோ அல்லது சத்தமாகவோ இருக்கலாம்.

உடலின் எந்தப் பகுதியை பாதிக்கிறது?

பொதுவாக உணர்ச்சி நரம்புகள் அல்லது உள்காதில் உள்ள முடி செல்கள் சேதமடையும் போது காது இரைச்சல் ஏற்படுகிறது. இது மூளைக்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது. இது பின்னர் ஒலியாக உணரப்படுகிறது.

இது நேரடியாக மூளையில் கூட ஏற்படலாம், இது மத்திய டின்னிடஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என மருத்துவர் பிரபாத் கூறுகிறார்.

காது இரைச்சல் கவனம் செலுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் தூக்கத்தையும் பாதிக்கலாம். ஒட்டுமொத்தமாக, இது உடலின் செயல்பாட்டை பாதித்து, இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காது இரைச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

காது இரைச்சல் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் போது, தகுந்த சிகிச்சைகளுடன் உடனே குணமாக்கலாம்.  ஆனால் தாமதமாகும் போது, உள் காதில் சேதம் ஏற்பட்டு காது கேளாமை மற்றும் வெர்டிகோவை ஏற்படுத்தும். இது தீவிரமடையும்போது உணர்ச்சி உறுப்புகள் சேதமடைந்து, நரம்புகளின் சிதைவுக்கு வழிவகுக்கும்.

மயக்க மருந்துகள் மற்றும் அமைதி கொள்ளச் செய்வதன் அடிப்படையில் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நோயாளியை அமைதியாகவும், நிதானமாகவும் வைத்திருக்க, முழுமையான சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. உள் காதில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்த வாசோடைலேட்டர் (Vasodilator) வழங்கப்படுகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

காது இரைச்சல் மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு இடையே தொடர்பு உள்ளதா?

கொரோனா தடுப்பூசி போடுவதால் காது இரைச்சல் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என ENT அறுவை சிகிச்சை மருத்துவர் திவ்யா பிரபாத் தெளிவுப்படுத்துகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment