Advertisment

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?

Covid 19 PostCovid Symptoms : உளவியல் சிக்கல்களை சமாளிக்க, கொரோனா தொற்றில் இருந்து மீண்டதற்கு பின்னர், தங்களது வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?

சேனாரா ஐலாவாடி என்பவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று பதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 28 வயதான அவர் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஒரு மாத்த்திற்கு மேலாகியும், அதிகப்படியான உடல் சோர்வு, மூச்சுத் திணறல் இருமல் என அனைத்து அறிகுறிகளும் உணர்ந்து வந்துள்ளார். இதனால் அவர் ஒரு சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்புவது கடினமாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிம் பேசிய அவர், கடந்த ஆண்டு நவம்பரில் இந்த நோய் வந்த பின்னர், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்டறிந்த்தாகவும், அதன்பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன்"தன்தை தனே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், இந்த காலகட்டத்தில், காய்ச்சல் இரண்டு முறை 103 ஆக உயர்ந்தது, பின்னர் சில நாட்களில் 99 ஆக குறைந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டு 17 நாட்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ளார். ஆனாலும் ஐலாவாடி தொடர்ந்து கொரோனா அறிகுறிகளை அனுபவித்து வருவதாகவும், "தான் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தபோதும், இருமல், குளிர் மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றுடன் தொடர்ந்து அதிகப்படியான இதயதுடிப்பு மற்றும் மார்பில் அதிகப்படியான கனத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது மருத்துவரை அணுகியபோது, கொரோனா தொற்று அவரது நுரையீரலை பாதித்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பின், ஐலாவாடி மருந்துகளை எடுத்துக்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 16 ம் தேதி கொரோனா தொற்று பரிசொதனை செய்துகொண்ட 29 வயதான நேஹா ராஜ்பால் இதேபோன்ற நீண்டகால அறிகுறிகளையும் அனுபவித்தார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட பிறகும்,, "நீடித்த இருமல் மற்றும் பலவீனம்" குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். இந்நிலையில், ஐலாவாடி மற்றும் ராஜ்பால் அனுபவித்தது "நீண்ட கோவிட் நோய்க்குறி" என்று அழைக்கப்படுகின்றன, இது ஒரு கொரோனா நோயாளி குணமடைந்த பிறகும் அவர்களுக்கு அறிகுறிகளைக் காட்டுகிறார், மேலும் இந்த அறிகுறிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனை ஷாலிமார் பாக் நுரையீரல் ஆய்வாளரும், (எச்ஓடி) HOD இன் இயக்குநருமான டாக்டர் விகாஸ் மயுரியா கூறுகையில், மிதமான முதல் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றுக்கு க்குப் பிந்தைய அறிகுறிகளை அனுபவிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இந்த நபர்கள் " தீவிர உடல் சோர்வு, தலைவலி, தசை வலி போன்ற கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளை அனுபவிக்க நேரிடலாம், அல்லது சிலர் இதயம் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்" என்று மயுரியா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோயாளிகள் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் என்ன எதிர்பார்க்க வேண்டும்?

‘லாங் கோவிட் சிண்ட்ரோம்’ தொற்றுகள் பல பதிவாகியுள்ளதால், மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டதற்கு பின்பும் அவர்களை உன்னிப்பாகக் கவனிக்கவும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றவும், உளவியல் சிக்கல்களைத் தடுக்க அவர்களின் வழக்கமான செயல்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். மேலும், மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்று குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது, இது பல்வேறு கொரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அவர்களிடம் கண்டறியப்படுகிறது.

கொரோனா தொற்று நோயாளிகளிடையே மியூகோமிகோசிஸ் என்ற அரிதான மற்றும் தீவிர பூஞ்சை தொற்று கண்டறியப்படுகிறது. இந்த நோய் பெரும்பாலும் தோலில் இருந்து வெளிப்படுகிறது. நுரையீரல் மற்றும் மூளையை அதிகமாக பாதிக்கிறது. இது குறித்து ஆர்ட்டெமிஸ் மருத்துவமனைகள் குர்கானின் கிரிட்டிகல் கேர் இயக்குநர் டாக்டர் ரேஷ்மா திவாரி கூறுகையில், லேசான மற்றும் மிதமான நோயுடன் வீட்டிலேயே குணமடைந்த நோயாளிகள் உடல் சோர்வு, தசை வலிகளை தொடர்ந்து அனுபவிக்க நேரிடலாம். இருப்பினும், அவர்கள் கண்ணை சுற்றி வலி அல்லது வீக்கம், கன்னத்து எலும்பு அல்லது கீழ் தாடை போன்ற மியூகோமைகோசிஸின் அறிகுறிகளைக் கவனித்து உடனடியாக மருத்துவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்

கொரோனா தொற்று எதிர்மறையாக மாறிய பிறகும் காற்றோட்டமான அல்லது ஆக்ஸிஜன் ஆதரவுடன் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர்கள் மேம்படும் வரை தொடர்ந்து மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும். அவை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள், பல உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மியூகோமிகோசிஸ் ஆகியவற்றுக்கு அதிக ஆபத்தில் இருக்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு பின் அறிகுறிகளை அனுபவிக்கும் போது தனிமைப்படுத்துதல்

கொரோனா வைரஸின் பரவுதல் விகிதம் மிக அதிகமாக இருந்தாலும், கொரோனா தொற்றுக்கு பின் நோயாளிகள் அனுபவிக்கும் அறிகுறிகளின் நிலைக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்றும் அவர்கள் தங்களது அண்றாட பணிகளை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் சிக்கல்களை சமாளிக்க, கொரோனா தொற்றில் இருந்து மீண்டதற்கு பின்னர், தங்களது வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என்று டாக்டர் மயுரியா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வீட்டில் ஸ்டெராய்டுகள் மற்றும் / ஆக்ஸிஜன் சிகிச்சையைப் பெற்ற மிதமான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் திவாரி பரிந்துரைக்கிறார்.

கொரோனா தொற்றுக்கு பிந்தைய அறிகுறிகளை அனுபவிக்கும் போது அல்லது தொற்றில் இருந்து மீளும்போது, ஒரு நோயாளி எப்போது சாதாரண செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடியுமா?

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாக பாதிக்கும் என்பதால், செயல்பாட்டை மீண்டும் தொடங்குவது வைரஸின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்களின் தன்மையைப் பொறுத்தது என்று டாக்டர் திவாரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் உடல் "சோர்வுடன் வீட்டில் இருந்தால், தசை வலி நோயாளி அதிக நேரம் கொடுக்க வேண்டும் மற்றும் நீட்டிக்கப்பட்ட ஓய்வை மேற்கொள்ள வெண்டும்.

இது குறித்து டாக்டர் மவுரியா கூறுகையில், ஒரு நோயாளி தனிமைப்படுத்தப்படும் போது கூட அவர்களின் வழக்கமான பணிகளை பின்பற்ற முடியும் என்று கூறுகிறார். “உதாரணமாக, ஒரு நபர் தவறாமல் உடற்பயிற்சி செய்தால், அவர் தனிமையில் கூட வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். ஒரு நோயாளி தனது அலுவலக வேலையை தனிமைபடுத்துதலில் செய்யலாம். ஆனால் அவை எவ்வளவு பாதிக்கப்படுகின்றன, என்பது மிகவும் முக்கியமானது.

தடுப்பூசி பிந்தைய கொரோனா

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தடுப்பூசி போடுவது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு உறுதியான வழியாகும். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது ஏன் என்ற கேள்வி பெரும்பாலும் நீடிக்கிறது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது சுறுசுறுப்பான பிளாஸ்மாவுடன் சிகிச்சையளிக்கப்பட்டால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு நோயாளிகள் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) அறிவுறுத்துகின்றன. எஸ்.ஐ.ஆர்.எஸ் கொரோனா தொற்று நோய் குணமடைந்த ஆறு மாதங்களுக்கு கோவிட் தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.

இது குறித்து டாக்டர் மவுரியா கூறுகையில், "இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு நோயாளிக்கு தடுப்பூசி போடப்பட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு தடுப்பூசி தேவையா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம், ஏனெனில் ஒரு நோயாளியின் உடலில் கொரோனா தொற்றுக்கு பின் உருவாகும் ஆன்டிபாடி தொற்றுநோயைத் தடுக்க முடியும், ”என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Covid 19 India Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment