Advertisment

வீட்டிலிருந்தபடி முன்கூட்டியே கோவிட் தொற்றைக் கண்டறிய நான்கு அடிப்படை விஷயங்கள்!

Covid preparedness at home சாதாரண வேகத்தில் 6 நிமிடங்கள் அறையில் நடந்து சென்று ஆக்ஸிஜன் அளவை மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Covid preparedness at home four basic things to know Tamil News

Covid preparedness at home four basic things to know Tamil News

Covid preparedness at home four basic things to know Tamil News : கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் இந்த காலகட்டத்தில், எந்நேரமும் விழிப்புடன் இருப்பது அவசியம். இது பரவும் நோய்த்தொற்று என்பதால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தில் இருப்பவர்களும் நல்ல சுகாதாரத்தைப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வது அவசியம்.

Advertisment

முலுண்டின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அவசர மருத்துவத்தின் இயக்குநர் டாக்டர் சந்தீப் கோர் சில முக்கியமான விஷயங்களை வீட்டிலேயே செய்ய முடியும் என்று கூறுகிறார்:

1. வீட்டிலிருந்தபடி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்கான முதல் படி, வீட்டில் போதுமான அளவு மாஸ்குகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதுதான். இவை, துணி முகமூடிகள் அல்லது சர்ஜிக்கல் சிகிச்சை மாஸ்க்குகளாகவும் இருக்கலாம். வெளியே செல்லும் போது, ​​பொது இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய இரட்டை துணி முகமூடி அல்லது ஒரு துணி மற்றும் ஒரு சர்ஜிக்கல் மாஸ்க்கை அணியுங்கள்.

2. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான சாதனம் டிஜிட்டல் தெர்மோமீட்டர். வீட்டில் உள்ள அனைத்து நபர்களின் வெப்பநிலையையும் தினமும் சரிபார்க்க வேண்டும். உடல் வலி, காய்ச்சல் அல்லது சோர்வு நிலை உள்ளவர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். 99.3-க்கும் அதிகமான வெப்பநிலை காய்ச்சலாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த நோயாளிக்கு உடனடி கவனம் மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவை. இந்த தொற்றுநோய் காலகட்டத்தில், ஒவ்வொரு காய்ச்சலும் கோவிட் நோய்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

3. மூன்றாவது முக்கியமான சாதனம் ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டிலேயே சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியம். பல்ஸ் ஆக்சிமீட்டர் ரீடிங் 93 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அவர் கோவிட் பராமரிப்பு மையம் அல்லது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். வீட்டிலேயே சிகிச்சையைப் பெறுபவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டரைப் பயன்படுத்தி உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் 6 மணி நேர இடைவெளியில் தங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

4. வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறு நிமிட நடை சோதனை மற்றும் சராசரி காற்று மற்றும் ஓய்வின் போது ஆக்ஸிஜன் அளவு சாதாரணமாக இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளி, சாதாரண வேகத்தில் 6 நிமிடங்கள் அறையில் நடந்து சென்று ஆக்ஸிஜன் அளவை மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. நடைப்பயணத்திற்குப் பிறகு ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால், அது ஆரம்பக்கால hypoxia-வின் அறிகுறி. மேலும், இந்த நோயாளி மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டும் அல்லது தங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் வீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டியைப் பெற வேண்டும். இந்த சோதனை ஆரம்பக்கால ஹைபோக்ஸியாவைக் கண்டறிந்து, நோயாளிக்கு அதிக மருத்துவ உதவியைப் பெற சிறிது நேரம் தருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Oxygen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment