Covid19 Lockdown day 8 check these amazing water color paintings from artist rajkumar sthabathy : 21 நாட்கள் குவாரண்டைன் காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் புலம்புவது எங்களுக்கு புரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உங்களின் 21 நாட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று புதுப்புது ஐடியாக்களை வழங்கி வருகிறோம். படங்கள், நகைச்சுவை, வெப்சீரிஸ், பாடல்கள் என அனைத்தும் போர் அடித்துவிட்டது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அப்போது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு செல்லுங்கள். உயிரோட்டமான ஓவியங்களை பார்த்து ரசியுங்கள். இது நிச்சயம் உங்களின் மனநிலையை சீராக்கும். புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.
ராஜ்குமாரின் ஒவ்வொரு ஓவியங்களும் எதார்த்த மனிதர்கள் பற்றி பேசும் ஓவியமாக இருக்கும். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் காணும் மனிதர்களை ஓவியமாக மாறினால் எப்படி இருப்பார்கள் என்பதை தான் ராஜ்குமாரின் ஓவியங்கள் எப்போதும் பேசும். ஓவியருக்கு ஒரு பாராட்டினை வைப்போம். தொடர்ந்து கலை உலகிற்கு உங்களின் படைப்புகளை தந்து கொண்டே இருங்கள்.
கலையும், கவிதையும், இசையும் இல்லாமல் போனால் மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றெல்லாம் இப்போது தான் யோசிக்க தோன்றுகிறது. நிச்சயமாக இந்த ஓவியங்களை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மேலும் படிக்க : வீட்டில் இருந்தே போர் அடிக்குதா? வாங்க நாம இப்போ வண்டலூர் ஜூவுக்கு போவோம்…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil