Advertisment

புளித்த தயிர் வேஸ்ட் அல்ல… ரெடிமேட் இட்லி மாவுடன் இதை மட்டும் சேர்த்து கலக்கிப் பாருங்க!

different curd recipes in tamil : தயிரின் புளிப்பு இட்லிக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது, மேலும் அது பஞ்சுபோன்றதாகவும் ஆக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Curd recipes in tamil: best ways to Use Sour Curd In Cooking in tamil

Curd recipes in tamil: உங்களது வீட்டில் தயிர் மீதம் இருக்கிறதா அல்லது கடைகளில் வாங்கிய தயிர் மீந்து விட்டதா? கவலையை விடுங்கள். அவற்றில் இப்போது சுவையான உணவு செய்து அசத்தலாம்.

Advertisment

அப்படி என்னென்ன உணவு தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போமா!

இட்லி

publive-image

தென்னிந்திய காலை உணவுகளில் ஒரு உன்னதமான உணவு இட்லி. இவற்றுடன் உங்கள் நாளை துவங்குவது சரியான தேர்வு ஆகும். இட்லிக்கு தயார் செய்யப்பட்ட மாவுடன் தயிர் மற்றும் தண்ணீர் மிக்ஸ் செய்து இட்லி சுட ஆரம்பிக்கலாம்.

தயிரின் இந்த புளிப்பு இட்லிக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது, மேலும் அது பஞ்சுபோன்றதாகவும் ஆக்குகிறது. சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் இந்த அற்புதமான இட்லியை சுவைத்து மகிழலாம்.

கதி

பிரபலமான இந்திய உணவுகளில் கதி-யும் ஒன்று. இந்த டேஸ்டியான உணவை இந்தியா முழுவதும் பல்வேறு வழிகளில் தயார் செய்கிறார்கள். இவற்றை தயார் செய்வதில் தயிர் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

கதி பகோரா மற்றும் பலக் கதி அல்லது சிந்தி கதி மற்றும் பூண்டி கதி ஆகியவை சுவையான கதி வகைகள் ஆகும்.

publive-image

இவ்வளவு வகைகளை கொண்டுள்ள கதியின் தனிச்சிறப்பு அதன் புளிப்பு சுவை தான். இதற்கான புளிப்பு தயிரிலிருந்து பெறப்படுகிறது. கதியை கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவில் தயார் செய்யலாம். இரண்டு சுவைகளும் சமமாக அற்புதமாக இருக்கும். நீங்கள் சப்பாத்தியுடன் கத்தியை பரிமாறலாம். ஆனால், கதியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

சீலா

3 வேளைகளிலும் உண்ண ஏற்ற உணவாக சீலா உள்ளது. உடல் எடை மீது அதிக கவனம் செலுத்துபவர்கள் நிச்சயம் இவற்றை சாப்பிட்டு வரலாம்.

publive-image

சுவையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் உள்ள இந்த சீலாவை நீங்கள் கடலை மாவு, உளுந்த மாவு, ஜோவர் மாவு மற்றும் பாசிப்பருப்பு மாவு என உங்களுக்கு விருப்பமான மாவுகளில் தயார் செய்யலாம்.

சீலாவுக்கான மாவு தயார் செய்யும் போது ஒரு கைப்பிடி வெங்காயம், தக்காளி மற்றும் கேப்சிகம் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.

சீலாக்களுக்கு பஞ்சுபோன்ற அமைப்பைக் கொடுக்க மாவுடன் தயிர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த காய்கறிகள் அல்லது பனீர் ஆகியவற்றைச் சேர்க்கலாம்

தோசை

தென்னிந்திய ஸ்டைலில் நீங்கள் தோசை செய்ய விரும்பினால், உங்களுக்கு தேவையானது அரிசி, வெந்தய விதைகள் மற்றும் தயிர். இந்த செய்முறை தோசைகளுக்கு கசப்பான சுவையை அளிக்கும் மற்றும் சரியான அமைப்பையும் கொடுக்க உதவும்.

முதலில், அரிசி மற்றும் வெந்தய விதைகளை தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை ஒன்றாக கலந்து தோசைக்கான மாவு அரைக்கவும்.

publive-image

இப்போது, ​​தயிரை இன்னும் சேர்த்து மேலும் 6 மணி நேரம் புளிக்க விடவும். இவற்றுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நிலைத்தன்மையையும் சுவையையும் சரிசெய்யவும்.

தோசை மாவு இப்போது தயாராக இருக்கும். சுலபமாக செய்யக்கூடிய இந்த மாவைப் பயன்படுத்தி மிருதுவான தோசைகளைப் பெறுங்கள்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Tamil Food Recipe Curd Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment