Advertisment

வேம்பு, வெந்தயம், எலுமிச்சை.. நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு ஆயுர்வேத தீர்வு

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ நாள்பட்ட பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது போகாமல் இருந்தால், ஆயுர்வேதத்தின்படி, இதற்கு ஒரு தோல் நோய் போன்ற சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dandruff home remedies

Ayurveda tips to get rid of dandruff

பொடுகு பிடிவாதமானது. நீங்கள் எத்தனை பொருட்களைப் பயன்படுத்தினாலும், அது மீண்டும் வரும் தன்மை கொண்டது.

Advertisment

வேதம்ரித் நிறுவனர் டாக்டர் வைஷாலி சுக்லா, இன்ஸ்டாகிராமில் ஒரு பயனுள்ள ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். இது பொடுகுத் தொல்லையைத் தடுக்கவும், உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

அது என்ன என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் விரும்பும் மூலிகை ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூ பொடியைப் போட்டு, பின்னர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

வேம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஹேக் பொடுகைத் தடுக்கவும், விலையுயர்ந்த ஷாம்பூக்களுக்கு அதிக பணம் செலவழிக்காமல் உங்கள் உச்சந்தலையை திறமையாக சுத்தம் செய்யவும் அற்புதமாக உதவுகிறது. ஆனால், இந்த ஹேக் பயனுள்ளதாக இருக்க ஒரு மூலிகை ஷாம்பு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ நாள்பட்ட பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது போகாமல் இருந்தால், ஆயுர்வேதத்தின்படி, இதற்கு ஒரு தோல் நோய் போன்ற சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது உங்கள் உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

வேம்பு, பாகற்காய், மஞ்சள் மற்றும் வாயுவிளங்கம் போன்ற சில ஆயுர்வேத மூலிகைகள் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உதவுகின்றன என்று அவர் மேலும் கூறினார். (எப்போதும் ஆயுர்வேத மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட வேண்டும்)

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்:

வேம்பின் அதிசய நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிபுணரும் ஆயுர்வேத நிபுணருமான கரிஷ்மா ஷா, வேம்பு பேஸ்ட், எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல் பேஸ்ட், வெந்தய விழுது மற்றும் நெல்லிக்காய் பேஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு வீட்டில் ஹேர் மாஸ்க் தயாரிக்க பரிந்துரைத்தார். பொடுகு விஷயத்தில் இது அதிசயங்களைச் செய்கிறது, என்று அவர் கூறினார்.

கேரள ஆயுர்வேதத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அர்ச்சனா சுகுமாரன் இதை ஒப்புக்கொண்டார். எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயும் நன்றாக வேலை செய்கிறது என்று அவர் கூறினார்.

எலுமிச்சைச் சாற்றில் மிகுதியாகக் காணப்படும் சிட்ரிக் அமிலம், பொடுகுத் தொல்லையின் வேர் முதல் நுனி வரை போரிட உதவுகிறது, அதே சமயம் தேங்காய் எண்ணெய் அரிப்புகளை வெற்றிகரமாக எதிர்த்து, உலர்ந்த உச்சந்தலையை ஹைட்ரேட் செய்கிறது. கூடுதலாக, இது உங்கள் தலைமுடிக்கு உணவளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பொடுகுக்கு மிகவும் பிரபலமான இயற்கை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு கலந்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு கழுவவும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும், வெந்தயமும் பொடுகுக்கான மிகவும் நம்பமுடியாத இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாகும் என்று நிபுணர் பகிர்ந்து கொண்டார், ஏனெனில் அவை பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களின் சிறந்த மூலமாகும்.

வெந்தயம் பொடுகுத் தொல்லையை நீக்கி, உங்கள் தலைமுடிக்கு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் ஊறவைத்து பேஸ்டாக அரைக்க வேண்டும். மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி, பேஸ்ட்டை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யவும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதை கழுவவும்.

பொடுகு தொல்லைக்கு நன்றாக வேலை செய்யும் மற்றொரு மருந்து செம்பருத்தி. இது முடிக்கு ஊட்டமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் பொடுகை எதிர்த்துப் போராடுகிறது. செம்பருத்திப் பூக்களை தேங்காய் எண்ணெயில் வதக்கி, சூடாக இருக்கும் போது தலையில் தடவினால், பொடுகு தொல்லை நீங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment