Advertisment

டார்க் சாக்லேட், மஞ்சள் பால்... நோய்த் தொற்றை விரட்டும் இம்யூனிட்டி உணவுகள்!

Immunity booster foods, dark chocolate, turmeric milk: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படுகிறது. இதற்கு கொரோனா நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மென்மையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது மாம்பழ பொடியை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
டார்க் சாக்லேட், மஞ்சள் பால்... நோய்த் தொற்றை விரட்டும் இம்யூனிட்டி உணவுகள்!

கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் பழைய உடல்நிலையை பெறுவதில் பெரும்பாலானோர்க்கு சிக்கல் இருந்து வருகிறது. இத்தகையவர்கள் அன்றாட உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

Advertisment

கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்கள் தசை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தேவையான ஆற்றலை மீண்டும் உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், மத்திய அரசு அதன் MyGov India ட்விட்டர் பக்கத்தில், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய உணவு பொருட்களின் பட்டியலை பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு கொரோனா நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மென்மையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமைக்கும் போது மாம்பழ பொடியை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சுவை மற்றும் வாசனையை இழப்பது கோவிட் நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும், இது தொற்றுநோயின் இரு காலகட்டங்களிலும் காணப்படுகிறது. இது பசியின்மைக்கு வழிவகுக்கும் என்பதால், நோயாளிகளுக்கு விழுங்குவது கடினமாக இருக்கும், மேலும் தசை இழப்பும் ஏற்படலாம். சிறிய இடைவெளியில் மென்மையான உணவுகளை சாப்பிடுவது முக்கியம், மேலும் உணவில் மாம்பழ பொடியை சிறிதளவு சேர்க்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது.

தொற்றுநோய் எதிர்ப்பிற்கான உணவுகள் சில.

போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெற பலவண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

பதட்டத்திலிருந்து விடுபட குறைந்தபட்சம் 70 சதவீத கோகோவுடன் கூடிய சிறிய அளவு டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் பாலை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட இடைவெளியில் மென்மையான உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் உணவில் மாம்பழ பொடியை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ராகி, ஓட்ஸ், அமராந்த் போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கோழி, மீன், முட்டை, பன்னீர், சோயா, முந்திரி, கடலை போன்ற பருப்பு வகைகள் மற்றும் விதைகள் போன்றவை புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உள்ளன. எனவே இவற்றை தினசரி உணவில் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைத் தரும் உணவுகள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Healthy Food Tips Healthy Food Turmeric
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment