Advertisment

உயிரை துச்சமாக நினைத்து சாதித்த மந்திரக்காரன்!

ஆனால் உள்ளே சென்றதை சென்றவரே வெளியில் எடுப்பதே Regurgitation என்ற ஒரு வித்தை. இது வரை இதை செயல் வடிவம் படுத்தியது இருவர் மட்டுமே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
David blaine

David blaine

லியோ

Advertisment

David Blaine : மனிதன், பல லட்ச ஆண்டுகளாக மேன்பட்ட வளர்ச்சியினை மட்டுமே கண்டுவருகின்ற ஒரு அதிசயமான இனம். இந்த 40.5 லட்ச ஆண்டு கால பயணத்தில் ஆயிரக்கணக்கான பரிணாம வளர்ச்சிகளை கண்ட மாபெரும் இனம். பிற சில இனங்களை போல உடல் ரீதியான மாற்றங்களை தாங்களாவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட அதிசய இனம். பொதுவாக நாம் வாழ்கின்ற நாட்களில் ஒருவர் மற்றவரை விட வித்தியாசப்பட்டும், உயர்ந்தும் காணவே விரும்புகின்றோம். இன்றைய பதிவும் பல விஷயங்களில், அன்றாட மனிதனில் இருந்து மாறுபட்டு திகழும் ஒரு தனி மனிதனை பற்றியதே.

நியூயார்க்கில் Brooklyn மாகாணத்தில் 1973ம் ஆண்டு தனித்து விடப்பட்ட ஒரு தாய்க்கு பிறந்தவரே David Blaine என்கின்ற உலகின் தலைசிறந்த Magician. மந்திரவாதி ? ஆம் இவரும் உலகில் நாம் அன்றாடம் கண்டு வியந்து ரசிக்கின்ற பிற magicianகளில் ஒருவரே. தன் 21 வயதில் Cancer வியாதியால் பாதிக்கப்பட்டதால் தன் தாயை இழந்தார். மைக் டைசன், Al Pacino (ஹாலிவுட் நடிகர்) போன்ற மாபெரும் மனிதர்களிடம் மேஜிக் செய்து காட்டி அசத்தியதன் மூலம் பிரபலம் ஆனார். ABC என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சியில் "David blaine : Street Magic " என்ற தலைப்பில் இவர் சாகசங்கள் வெளிவந்தது. 1997ம் ஆண்டுகளில் தலைசிறந்து நிகழ்ச்சியாகவும் அது தேர்ந்தெடுக்கபட்டது. புகழின் உச்சம் தொட்டார் David Blaine.

மேஜிக் சாகசங்கள், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் இவை எல்லாம் அன்றாடம் நடப்பது தானே, இதில் இவர் தனித்து தெரிய என்னவிருக்கிறது என்று நீங்கள் வினைவது முறையே. இதோ அவர் தனித்துவம் பற்றி காண்போம். சிலர் தன் உடலை எந்த ஒரு உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு தனித்துவம் கொண்டவர்களாக திகழ்ந்துள்ளனர். 1892ம் ஆண்டு எகிப்தில் பிறந்த Hadji Aliயும் அதில் ஒருவரே. இவரையே David Blaine தன் முன்னோடியாக காண்கிறார். Hadji போலவே Davidம் தன் உடலை என்நிலைக்கும் கொண்டு செல்வார்.

1999 ஆண்டு முதல் முதலில் 1815 கிலோ பனிப்பாறையின் கீழ் 72 மணி நேரம் அடைபட்டு கிடந்தது சாதனை படைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து 100 அடி உயர தூணில் எவ்வித பாதுகாப்பு கருவிகளும் இன்றி 35 மணி நேரம் தொடர்ச்சியாக நின்று VERTIGO எனப்படும் தலைசுற்றலை அடையாத நிலையில் சாதனை புரிந்தார்.

2003ம் ஆண்டு தேம்ஸ் நதிக்கரையில் ஒரு பெரும் கூட்டம் கூடியது, அது இவர் செய்யவிருந்த ஒரு உச்சகட்ட சாகசத்தை காணவே. ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் மட்டுமே உட்கொண்டு 44 நாட்கள் அந்தரத்தில் தொங்கும் ஒரு சிறிய கண்ணாடி பெட்டிக்குள் அடையுண்டு கிடக்கும் சாகசமே அது. அதையும் வெற்றியாக செய்து முடித்து உலக அளவில் வரவேற்பை பெற்றார் David Blaine. தன் உடலை எந்த நிலைக்கும் கொண்டு செல்ல இவர் தயங்கியதே இல்லை. நாம் அன்றாட காணும் விண்ணில் பறப்பது, சீட்டு கட்டுகளை மறைய வைப்பது போன்ற Magicகள் பொதுவாக உள்ளதே. ஆனால் உலகில் சிலரால் மட்டுமே செய்யக்கூடிய Magicம் இங்கு உண்டு. Pierced Arm என்ற ஒரு வகை மேஜிக் செய்வதில் வெகு சிலரே தேர்ச்சி பெற்றவர்கள் அதில் Davidம் ஒருவர். கத்தியே அல்லது நீண்ட ஊசியோ கொண்டு துளியும் ரத்தம் வராமல் உடலுக்குள் நுழைத்து எடுப்பதே அது. இதை இதயத்திற்கு அருகில் செய்து கட்டியவர்களும் உண்டு.

Regurgitation (விழுங்கி பிறகு வெளியே தள்ளுவது) பொதுவாக பிறப்பில் இருந்தே மனிதனால் விழுங்கியதை தானாக வெளியே தள்ளமுடியும். ஆனால் உள்ளே சென்றதை சென்றவரே வெளியில் எடுப்பதே Regurgitation என்ற ஒரு வித்தை. இது வரை இதை செயல் வடிவம் படுத்தியது இருவர் மட்டுமே. ஆம் அவர்கள் நம் Hadji மற்றும் David. முதலில் தண்ணீரை விழுங்கி அதன் பின் எரிபொருளை விழுங்கி, முதலில் எரிபொருளை வெளியே தள்ளி அதன் மூலம் சில பொருட்களுக்கு தீ மூட்டி, பின்னர் விழுங்கிய நீராலே அந்த தீயை அணைப்பதே அந்த சாகசம். டேவிட் அதே வித்தையை செய்வதில் கைதேர்ந்தவர். ஆனால் துரதிஷ்ட வசமாக அதை செய்து இன்றும் உயிருடன் இருப்பது இவர் மட்டுமே. Hadjiயை மரணப்படுக்கையில் தள்ளியது அந்த சாகசம். ஆனால் David Blaine அதை சரியான முறையில் பயிற்சி மேற்கொண்டு அதன் பின்னரே செய்கின்றார். மேலும் தவளை, மீன் போன்ற சிறிய உயிரினங்களை விழுங்கி பின்னர் அதை வெளியே எடுப்பதை கற்றுள்ளார். இது வரை அதிகபட்சமாக 4 தவளைகளை விழுங்கி பின்னர் வெளியே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை போன்ற தனித்துவம் மிக்க மக்கள் நாம் வாழும் பூமியில் நம்மை சுற்றியும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பது உண்மையே. தன்னை போல யாரும் எதையும் தக்க மேற்பார்வையும், பயிற்சியும் இன்றி செய்து பார்க்கவேண்டாம் என்பதே அவரின் கருத்து.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment