Advertisment

திரைத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் வெற்றி பயணம்.. தீபா வெங்கட்!

கோபுரம், அண்ணாமலை, ரோஜா, கோலங்கள் என 2010-ஆம் ஆண்டு வரை படங்களிலும் சீரியலிலும் பிஸியாக இருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Dubbing Artist Deepa Venkat

தீபா வெங்கட்

deepa venkat daughter deepa vekat : நடிகை நயன்தாராவை தெரியாதவர்கள் நிச்சயம் தென்னிந்தியாவில் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு பின்னணி குரலாக ஒலித்துக் கொண்டிருப்பது நடிகையும், ஆர்.ஜே-வுமான தீபா வெங்கட்.நடிகர் அஜித் நடித்த பாசமலர்கள் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் தீபா. அதன் பிறகு அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தினம்தோறும், பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதே நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக வலம் வந்தார் தீபா வெங்கட்.

Advertisment

96-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இப்படிக்கு தென்றல் என்ற சீரியல் தான் தீபாவிற்கு முதல் தொலைக்காட்சி எண்ட்ரியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு, சித்தி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதில் விஜி என்ற பாசிட்டிவான பெண்ணாக நடித்திருந்தார். பின்னர் கோபுரம், அண்ணாமலை, ரோஜா, கோலங்கள் என 2010-ஆம் ஆண்டு வரை படங்களிலும் சீரியலிலும் பிஸியாக இருந்தார்.

குறிப்பாக தேவயானியின் தோழியாக கோலங்கள், நாடகத்தில் நடித்த உஷா கதாபாத்திரத்தை ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. கிட்டத்தட்ட 80 சீரியல்களில் நடித்துள்ளார் தீபா. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை அளித்து சிறப்பித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தீபா, அதன் பிறகு சினிமாவுக்கும் சீரியலுக்கும் இடைவெளி விட்டார். ஆனால் தனியார் வானொலியில் ஆர்ஜே-வாக 10 ஆண்டுகள் பணியாற்றி கடந்தாண்டு அதிலிருந்தும் பிரேக் எடுத்தார்.

மயக்கம் என்ன, இமைக்கா நொடிகள், கேம் ஓவர் போன்ற படங்களில் ஹீரோயினுக்குக் கொடுத்த குரலுக்காக விருதுகளையும் வென்றிருக்கிறார் தீபா. தற்போது குக்கிங்கில் படு பிஸியாக உள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment