Advertisment

தோல் மருத்துவர் எச்சரிக்கை.. இந்த உணவுகள் முகப்பருவை தூண்டும்!

தோல் மருத்துவர் அலேக்யா, சில நபர்களுக்கு முகப்பருவைத் தூண்டக்கூடிய சில உணவுகளை சமீபத்தில் பட்டியலிட்டார்.

author-image
WebDesk
New Update
Skin Care Tips

Dermatologist shares food items that cause acne

தோல் பராமரிப்பு என்பது கவனிப்புக்கும். நிலைத்தன்மைக்கும் இடையே ஒரு நுட்பமான சமநிலையை பராமரிப்பதாகும். எனவே, ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை அடைவதற்கு, சமச்சீர் உணவு, உங்கள் சரும வகைக்கு ஏற்ற சருமப் பராமரிப்பு, போதுமான தூக்கம், நீரேற்றம் - அனைத்தும் சமமாக அவசியம்.

Advertisment

ஆனால், இதையெல்லாம் செய்தாலும், நீங்கள் இன்னும் முகப்பரு பாதிப்பை அனுபவிக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம், தோல் மருத்துவர் அலேக்யா, சில நபர்களுக்கு முகப்பருவைத் தூண்டக்கூடிய சில உணவுகளை சமீபத்தில் பட்டியலிட்டார்.

“எல்லோருடைய சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில உணவுகள் சில நபர்களுக்கு முகப்பருவைத் தூண்டும்,”

இந்த உணவுகளில் பின்வருவன அடங்கும்:

  • சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள்
  • மோர் புரதம் / சோயா புரதம்
  • வேர்க்கடலை
  • மத்தி மீன்
  • உப்பு
  • சர்க்கரை
  • மிட்டாய்
  • குளூட்டன் (பொதுவாக ரொட்டி அல்லது பாஸ்தாவில் காணப்படும்)
  • மது
  • சோடா
  • சிவப்பு இறைச்சி

சர்க்கரை அல்லது சர்க்கரை பானங்கள், வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி போன்ற உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் (high glycemic index) உணவுகள் முகப்பருவை மோசமாக்கும் இன்சுலின் ஸ்பைக்கைத் தூண்டும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக "புதிய பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான புரத மூலங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான சமச்சீர் உணவை தேர்ந்தெடுங்கள்”

வெள்ளை அரிசி அல்லது மைதாவிற்கு பதிலாக ஓட்ஸ், ப்ரெளன் அரிசி, கீன்வா, கம்பு, ராகி போன்ற ஆரோக்கியமான தானியங்களை பயன்படுத்தலாம்.

உங்கள் அன்றாட உணவில் இருந்து, பட்டியலிடப்பட்ட உணவுகளை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமில்லை என்றாலும், ஒரு சிறிய கட்டுப்பாடு உங்களை நீண்ட தூரம் செல்லும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment