Advertisment

ஆண்களுக்கும் ஸ்ட்ரெச் மார்க்ஸ்? எப்படி சரி செய்றதுனு தெரியலையா? தோல் மருத்துவர் சொல்வதை கேளுங்க!

ஸ்ட்ரெச் மார்க்ஸ்’ நீங்கள் நினைப்பதை விட மிகவும் பொதுவானவை! இருப்பினும், அது இன்னும் உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் சருமத்தின் மீது நம்பிக்கையைக் குறைத்தால்... நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stretch-marks

Dermatologist shares tips to get rid of stretch marks

பெண்களுக்கு மட்டுமே ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. பல காரணங்களால் ஆண்களும் தங்கள் தோலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் பிரச்சனையை அனுபவிக்கலாம்.

Advertisment

ஸ்ட்ரெச் மார்க்ஸ் மிகவும் பொதுவானவை என்றாலும், சிலர் இன்னும் அவற்றால் கவலைப்படுவார்கள்.

மருத்துவரீதியில் ‘ஸ்ட்ரேயா டிஸ்டென்சே’ (straiae distensae) என அழைக்கப்படும், அவை பொதுவாக தோலில் சிவப்பு அல்லது ஊதா நிறக் குறிகளாகத் தொடங்கி, பின்னர் மெதுவாக மங்கி வெள்ளை அல்லது வெள்ளி நிறக் குறிகளாக மாறும்.

உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸூக்கு சிகிச்சை அளிக்க விரும்பினால், தோல் மருத்துவர் ராஷ்மி ஷெட்டி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

கிரீம் மற்றும் எண்ணெய்

நிபுணரின் கூற்றுப்படி, சில கிரீம்கள் மற்றும் எண்ணெய்கள்’ நீரேற்றம், ஈரப்பதம் அளிப்பதுடன் உங்கள் சருமத்தை குணப்படுத்தும், இவை ஸ்ட்ரெச் மார்க்ஸ்’ குறைக்க உதவும். தோல் நெகிழ்ச்சியை மேம்படுத்தும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

கூடுதலாக, உங்கள் சருமத்திற்கு அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்களைக் கொடுக்கும் கிரீம்கள்’ தோல் மீளுருவாக்கம் செய்ய உதவும். ஹைலூரோனிக் அமிலம் மற்றும் ரெட்டினோல் போன்ற கிரீம்கள் மற்றும் சீரம் ஆகியவை உண்மையில் உதவுகின்றன," என்று அவர் கூறினார்.

பீல்ஸ் (Peels)

நீண்ட நேரம் தங்கியிருக்கும் ரெடின்-ஏ பீல்ஸ் போன்றவை’ செல் வளர்ச்சியை அதிகரிக்கும், இதன் மூலம், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் குணமாக உதவும்.

மைக்ரோ-நீட்லிங் (Micro-needling with radiofrequency)

இந்த தொழில்நுட்பம் "சருமத்தின் ஆழத்தில் ஊடுருவி, சாத்தியமான சிகிச்சையை வழங்குகிறது, புதிய கொலாஜன், புதிய எலாஸ்டின் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், தோலை இறுக்குவதற்கும் போதுமான ஆழத்திற்கு செல்கிறது. இதன் மூலம், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் குறைக்கிறது.

"ஸ்ட்ரெட்ச் மார்க்ஸைப் பார்த்தவுடனேயே சரி செய்ய வேண்டும்". அவற்றை  சமாளிப்பது கடினம், மேலும் அவை முதிர்ச்சியடையும் போது – இன்னும் கடினமாகிறது," என்று மருத்துவர் ஷெட்டி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment