சாக்ஷி சிங் தோனியின் தாய் மட்டுமல்ல, கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் மாமியாராகவும் அறியப்படுபவர் ஷீலா சிங். இவர் தான் தோனியின் பிசினஸ் சாம்ராஜ்யத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறார்.
தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) உள்ள ஷீலா, நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டி எழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் முதலில் வீட்டை கவனித்து வந்தார்.
அவரது கணவர் ஆர்.கே.சிங், மகேந்திர சிங் தோனியின் தந்தையுடன் கனோய் குழுமத்தின் ‘பினாகுரி டீ நிறுவனத்தில்’ இணைந்து பணியாற்றினார். அப்போது ஷீலா தோனியில் பிசினஸில் பங்கேற்றார்.
அவரது மகள் சாக்ஷியுடன் இணைந்து, தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஷீலா சிங் மற்றும் சாக்ஷி தோனியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் நிகர மதிப்பு வெறும் நான்கு ஆண்டுகளில் 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம் சாக்ஷி தோனி, தயாரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“