Advertisment

சுகர் ஜிவ்வென ஏறுகிறதா? சாப்பிட்ட பிறகு 2 நிமிடம் இதைப் பண்ணுங்க!

உணவு உண்ட உடனேயே சோம்பேறித்தனமாக இருப்பது வறுமையை வரவழைக்கும் என்று பெரியவர்கள் கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips in tamil

இங்கு ஒரு ஆய்வு, உங்கள் உணவுக்குப் பிறகு சிறிது நடக்க வேண்டும் என்று கூறுகிறது.

நம் தினசரி பிஸியான வாழ்க்கையில் இப்போதெல்லாம் சாப்பிடுவதே ஒரு பெரிய வேலையாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் எவ்வளவு வேலை இருந்தாலும், தவறாமல் உணவருந்திய பிறகுதான், மற்ற வேலைகளை பார்ப்பார்கள். ஆனால், இன்று நாம், மற்ற வேலைகளை பார்த்துவிட்டு, நேரம் கிடைத்தால் தான் சாப்பிடுகிறோம்.

Advertisment

ஒருநாளில் உங்கள் ஆரோக்கியத்துக்காக அவசியம் சில நிமிடங்களை நீங்கள் ஒதுக்க வேண்டும். இங்கு ஒரு ஆய்வு, உங்கள் உணவுக்குப் பிறகு சிறிது நடக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி செய்வதால், டைப் 2 நீரிழிவு நோய் வராமல் நீங்கள் தடுக்கலாம்.

உணவு உண்ட உடனேயே சோம்பேறித்தனமாக இருப்பது வறுமையை வரவழைக்கும் என்று பெரியவர்கள் கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஷடா-பாவலி (Shata- 100, Pavali- Steps) என்பது ஒரு பழங்காலக் கருத்தாகும், எந்த உணவுக்குப் பிறகும் குறைந்தபட்சம் 100 படிகள் மெதுவாக நடக்க வேண்டும்.

இரண்டு நிமிட நடைப்பயிற்சி  உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம் என்று இப்போது புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

ஏழு ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது.

மிதமான- தீவிர நடைபயிற்சி, போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

publive-image

ஏழு ஆய்வுகளில் இரண்டில் நீரிழிவு மற்றும் நீரிழிவு இல்லாத பங்கேற்பாளர்கள் அடங்குவர். மீதமுள்ள ஐந்து பேர் சர்க்கரை நோயின் வரலாறு இல்லாத பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தனர். அதில் உணவருந்திய பிறகு, சில நிமிடங்கள் மெதுவாக நடப்பது கூட இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, சாப்பிட்ட பிறகு 60 முதல் 90 நிமிடங்களுக்குள் நடப்பது (இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்தில் இருக்கும் போது) உட்கார்ந்து அல்லது நிற்பதை விட இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் படிப்படியான மாற்றங்களுடன் தொடர்புடையது.

ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் தடுப்பு இருதய மருத்துவராக கெர்ஷா பட்டேல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியமும் ஒரு சிறிய அடியாக இருந்தாலும் பலன் தரும் என்று கூறுகிறார். உணவுக்குப் பிறகு நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சி  செய்வதால், சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில், இது சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டாக இருக்கும், இது நீண்ட காலத்திற்கு, நோயின் சிக்கல்களைக் குறைக்கும். எனினும், உடற்பயிற்சியின் நேரம் முக்கியமானது.

உணவுக்கு பிறகு, ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரத்தில் நடைபயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.  ஏனெனில் அப்போதுதான், இரத்த ஓட்டத்தில் இரத்த சர்க்கரை அளவு உச்சத்தை அடையும்.

அதேநேரம் சாப்பிட்ட பிறகு உடனே தீவிரமாக உடற்பயிற்சி செய்வது சில அஜீரணம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சில சமயங்களில் ஒவ்வொரு வாரமும் 150 நிமிட மிதமான தீவிர உடல் செயல்பாட்டை செய்வது கடினமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, சமைப்பது, அல்லது சமையலறையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாம்.

எல்லாவற்றையும் விட உங்கள் ஆரோக்கியம் மதிப்புமிக்கது. எனவே உங்கள் உடல்நலத் தேவைகளிலும் கவனம் செலுத்த சில வழிகளைக் கண்டறியவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment