Advertisment

Diabetes: சுடுநீரில் கால்களை மூழ்க வைக்கும் வழக்கம் இருக்கிறதா? உஷார், இந்த ஆபத்து இருக்கு!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளை உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய்த்தொற்றுகள் பொதுவாக உங்கள் பாதங்களில், குறிப்பாக உங்கள் கால்விரல்களுக்கு இடையில் சரியாக உலர்த்தாததால் வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Diabetics, this is why you must be extremely careful when soaking your feet

வெதுவெதுப்பான நீரில் உங்கள் பாதங்களை வைப்பது நிச்சயமாக இதமாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நாள் முழுவதும் நின்று கொண்டிருந்தால். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் சுடு நீரில் உங்கள் பாதங்களை நனைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆபத்தில் உள்ளனர்.

Advertisment

diabetic peripheral neuropathy என்று அழைக்கப்படும் இந்த நிலை, நீரிழிவு நோயாளியின் வலி, வெப்பம் மற்றும் குளிர் உணர்வை உணரும் திறனைக் குறைக்கும், அதாவது தோல் உடைந்து புண் உருவாகும் வரை, நீங்கள் காலில் காயத்தை உணராமல் இருக்கலாம்.

நரம்பு சேதம் உங்கள் பாதங்கள் மற்றும் கால்விரல்களின் வடிவத்தில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது கால்களில், உடல் எடையின் சீரற்ற விநியோகத்தை ஏற்படுத்தி, கால் காயங்கள் ஏற்படும் அதிக வாய்ப்புள்ளது.

நியூரோபதி

இது உங்கள் பாதங்களில் உள்ள நரம்புகள் சிதையத் தொடங்கும் ஒரு நிலை, நீங்கள் உங்கள் கால்களை நனைக்கும் நீரின் வெப்பநிலையை அளவிடுவது கடினம். இந்த உணர்வின்மை உங்கள் பாதங்களில் உள்ள தோலை காயப்படுத்தும் அல்லது எரியும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக உங்கள் கால்களை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கும் தண்ணீரில் வைக்கும் போது, கால் புண் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பூஞ்சை தொற்று

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளை உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய்த்தொற்றுகள் பொதுவாக உங்கள் பாதங்களில், குறிப்பாக உங்கள் கால்விரல்களுக்கு இடையில் சரியாக உலர்த்தாததால் வருகின்றன.

எனவே, நீங்கள் உங்கள் கால்களை நனைத்து, அவற்றை நன்கு உலர வைக்காமல் இருந்தால், அது ஒரு பூஞ்சை தொற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம், அது மிக விரைவாக கடுமையான தொற்றுநோயாக மாறும்.

வறண்ட பாதங்கள்

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் இந்த நிலை அவர்களின் தோலில் உள்ள நீரேற்றத்தின் அளவைக் குறைக்கிறது. அதனால்தான் உங்கள் கால்களை தண்ணீரில் மூழ்க வைப்பது உங்கள் சருமத்தை இன்னும் உலர வைக்கும். தண்ணீர் உங்கள் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை அகற்றிவிடும். இதனால் சருமம் வறண்டு விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆனால், பாத பராமரிப்பு அவசியம்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களை நீரில் ஊறவைப்பது நல்ல யோசனை இல்லை என்றாலும், நீரிழிவு நோயின் சுய-பராமரிப்பில் பாத பராமரிப்பு ஒரு முக்கிய பகுதியாகும்.

உங்கள் பாதங்களை கவனிக்காமல் இருப்பது பிற்காலத்தில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்; கீறல் போன்ற சிறிய பிரச்சினைகள் கூட தொற்று அல்லது கால் புண்களுக்கு வழிவகுக்கும், இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உறுப்பு துண்டிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

publive-image

எப்சம் உப்பு போன்ற எந்த சேர்க்கைகளையும் தண்ணீரில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் பாதங்களை மேலும் வறண்டு போக செய்யலாம்.

எனவே தினமும் உங்கள் பாதங்களில் சிறிது கவனம் செலுத்தி, அதே நேரத்தில் உங்கள் நீரிழிவு நோயைக் கவனித்துக் கொள்வதன் மூலம், நீங்கள் பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் முகத்தைப் போலவே பாதங்களையும் தினசரி பராமரிக்க வேண்டும். ஏதேனும் காயங்கள் அல்லது நோய்த்தொற்றுகள் இருக்கிறதா என்று கண்கானிக்க வேண்டும்.

மாய்ஸ்சரைஸ்

உங்கள் கால்களைக் கழுவிய பிறகு, உங்கள் கால்களின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஆல்கஹால் இல்லாத லோஷன், கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துவது நல்லது. இருப்பினும், உங்கள் கால் விரல்களுக்கு இடையில் லோஷனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அந்தப் பகுதி இயற்கையாகவே ஈரமாக இருக்கும் என்பதால், லோஷனைப் பயன்படுத்துவது ஈரப்பதத்தை அதிகரித்து பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

கால்களை தவறாமல் கழுவி உலர வைக்கவும்

ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களைக் கழுவி நன்கு உலர்த்துவது, குறிப்பாக கால்விரல்களுக்கு இடையில், உங்கள் பாதங்களை பராமரிக்க சிறந்த வழியாகும்.

தொற்று அல்லது காயம் இருந்தால்

நீரிழிவு நோயாளியாக, சிறிய காயங்கள், சரியாக கவனிக்கப்படாவிட்டால், கால் புண்களுக்கு வழிவகுக்கும். எனவே, காயம் அல்லது நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் (நிறம் மாறிய நகங்கள், விரிசல், சிறிய வெட்டுக்கள் அல்லது கீறல்கள் போன்றவை) உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரைச் சந்தித்து சரியான சிகிச்சை பெறுவது நல்லது.

சரியான பாதணிகளை அணிவது

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பாத பராமரிப்புக்கான மற்றொரு அம்சம் சரியான பாதணிகளை அணிவது. கால்சஸ் (தெரபி கரெக்டிவ் ஷூ) வளர்ச்சியைத் தடுக்க உதவும் பாதணிகளை அணிய பரிந்துரைக்கப்படுகிறது,

இறுதியாக, உங்கள் கால்களை தண்ணீரில் ஊறவைக்க விரும்பினால், இங்கே சில முன்னெச்சரிக்கைகள் உள்ளன:

* நீரின் வெப்பநிலையைச் சோதிக்க வேறொருவரிடம் கேளுங்கள்.

* உங்கள் கால்களை நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைப்பதை தவிர்க்கவும்.

* ஊறவைத்த பிறகு, உங்கள் கால்களை, குறிப்பாக உங்கள் கால்விரல்களுக்கு இடையில் நன்கு உலர்த்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

*எப்சம் சால்ட்கள் போன்ற எந்த சேர்க்கைகளையும் தண்ணீரில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் கால்களை மேலும் உலர்த்தும்.

(Dr Sanjay Sharma is a podiatric surgeon and wound care specialist, and co-founder of FootSecure, Yostra Labs)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment