மனிதன் சொல்லாத 13 ரகசியங்கள் : ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

சராசரி மனிதன் ஒருவன் ஒரு சமயத்தில் 13 ரகசியங்களை வைத்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சிகரெட் குடிப்பதை தனது குடும்பத்திற்கு தெரியாமல் சீக்ரெட்டாக வைத்திருப்பவர்கள் ஏராளம். அதுபோல தான் ரகசியங்களை கட்டிக்காப்பது என்பது இமயமலையில் ஏறுவது போலத்தான். கடினமாக இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பது. ஒரு கட்டத்தில் சில ரகசியங்களை நாமே வெளியில் சொல்லிவிடுவோம் தானே.

அப்படி இருக்கையில், சராசரி மனிதன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 13 ரகசியங்களை பாதுகாத்து வருகிறானாம். அதிலும், 5 ரகசியங்களை அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மூலம், பொதுவான 13000 ரகசியங்கள் ஆராயப்பட்டன. அதைக்கொண்டு மிகப் பொதுவான 38 ரகசியங்கள் வகைப்படுத்தப்பட்டன.

அதன்படி ஆய்வு பங்கேற்பாளர்களிடம் நம்பிக்கைத் துரோகம் முதல் நிதி சம்பந்தமான ரகரியங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில், சராசரி மனிதன் ஒருவன் 13 ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறார். அதில் குறிப்பிடும்படியாக யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் 5 ரகசியங்களை அவர் பாதுகாத்து வருகிறாராம்.

தவறான காதல் உணர்வு, பாலியல் நடத்தை, பொய் கூறுதல் உள்ளிட்டவைகளை யாரிடமும் அவர்கள் தெரிவிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு நபர் தனது ரகசியங்களை கட்டிக்காப்பது என்பது தனித்துவம் வாய்ந்தது. தனது ரகசியங்கள் குறித்து ஒருவர் நினைத்துப் பார்க்கும் பாது அவர்கள் தனது உடலில் சுமை ஏறியது போல உணருகின்றனர் என ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்தாக இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வேறு சில விஷயங்கள் கண்டறியப்பட்டன. அதாவது, ஒருவர் தனது ரகசியங்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும் போது அவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகளே உருவாகுமாம். எந்த வேலை என்று எடுத்துக்கொண்டாலும் அது அவர்களுக்கு மிகவும் கடினமானது என்றே நினைக்கத் தோன்றும் என ஆராய்சியாளர்கள் கண்டறிந்தனர்.

×Close
×Close