இப்படி ஒரு முடிவு எடுக்கவும் கட்ஸ் வேணும்.. நடிப்புக்காக வேலையை துறந்த நியூஸ் ரீடர் திவ்யா துரைச்சாமி!

இணையத்தில் இருக்கும் ஃபேன்ஸ் ஃபாலோ பெரிய திரையில் கிடைக்குமா?

divya duraisamy age news reader divya duraisamy
divya duraisamy age news reader divya duraisamy

divya duraisamy age news reader divya duraisamy : செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி பற்றி இணையவாசிகளுக்கு அறிமுகமே தேவைப்படாது. அதுவும் இந்த லாக்டவுனில் மொட்டை மாடியில் திவ்யா துரைசாமி நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்கள் ஒரு நாள் முழுவதும் ட்விட்டரில் வைரலானது. “எப்ப மேடம் ஃபோட்டோ போடுவீங்க” ன்னு ட்வீட் போட்டு தொல்லை செய்யாதவர்களே இல்லை. எப்படி குறுகிய காலத்தில் இப்படி ஒரு வளர்ச்சி? அடுத்து பிரபல நடிகர் படத்தில் திவ்யா தான் ஹீரோயின் என்ற தகவலும் பரவி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பலரும் வருவது புதிததல்ல. ஆனால் நியூஸ் வாசிப்பாளர் பணியை விட்டு கோலிவுட்டில் கால் பதிக்க நினைப்பது கண்டிப்பாக புதியது தான். இதற்கு முன்பு ப்ரியா பவானி சங்கர் நியூஸ் ரீடராக இருந்து இப்போது கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் திவ்யா துரைசாமி.

ஹரிஸ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் மா.கா.பா ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா. இந்த படத்திற்கு பிறகு திவ்யா முழுவதுமாக நடிப்பில் கவனம் செலுத்த முடிவு எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிருக்கும் படத்திலும் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார். கூடிய விரைவில் அந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

அதுமட்டுமில்லை, சினிமா வாய்ப்பு ப்ளஸ் பொழுபோக்கிற்காக லாக்டவுனில் 75 நாட்கள் தனது ட்விட்டர், இன்ஸ்டாவில் திவ்யா வெளியிட்ட ஃபோட்டோ ஷூட் படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை பெற்று தந்து இருந்தது. திவ்யா துரைசாமிக்கு இணையத்தில் இருக்கும் ஃபேன்ஸ் ஃபாலோ பெரிய திரையில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Divya duraisamy age news reader divya duraisamy instagram divya duraisamy movies

Next Story
குக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com