Advertisment

மந்தமான, வறண்ட கூந்தலா? வாழைப்பழ தேங்காய் ஹேர் மாஸ்க் டிரை பண்ணுங்க

வாழைப்பழம் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த மூலமாகும். தேங்காய் பால் ஒரு நேச்சுரல் சாஃப்ட்னர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair care tips

Coconut banana hair mask for dull frizzy hair

முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒருவர் முதலில் அவர்களின் முடி வகையை அறிந்து பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

இருப்பினும், மந்தமான மற்றும் உடையக்கூடிய முடி, பலர் அனுபவிக்கும் பொதுவான முடி பிரச்சனை. வாழைப்பழ ஹேர் மாஸ்க் மந்தமான கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்த மாஸ்க் அனைத்து முடி வகைகளுக்கும் நல்லது. இது மிகவும் இயற்கையான டீப் ஹேர் கண்டிஷனர்களில் ஒன்றாகும்.

வாழைப்பழ தேங்காய் ஹேர் மாஸ்க்கை எவ்வாறு தயாரிப்பது என்பது இங்கே.

தேவையான பொருட்கள்

publive-image

1 - பழுத்த வாழைப்பழம்

1 டீஸ்பூன் - தேன்

2 டீஸ்பூன் - தேங்காய் பால் பவுடர்

எப்படி செய்வது

அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை சுத்தமான தலைமுடியில் தடவவும்.

உடல் சூட்டைத் தக்கவைக்க ஷவர் கேப் அணிந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.

வாரத்திற்கு ஒருமுறை இதை செய்யவும்.

நன்மைகள்

வாழைப்பழம் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த மூலமாகும். வாழைப்பழ புரதம்’ முடி அமைப்பை மேம்படுத்துகிறது. மொத்தத்தில், வாழைப்பழம் ஒவ்வொரு முடி  இழையையும் பலப்படுத்துகின்றன. முடி மென்மையாகவும் வலுவாகவும் மாறும், இதனால் உடைவது தடுக்கப்படுகிறது.

தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர். இது உச்சந்தலையை ஆழமாக சுத்தப்படுத்தவும் வேலை செய்கிறது.

தேங்காய் பால் ஒரு நேச்சுரல் சாஃப்ட்னர். இது உங்கள் தலைமுடியை மென்மையாக்கும் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர் ஆகும். இது தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment