Advertisment

வாய்ப்புகள் எப்போதும் நம்மை தேடி வராது! டிஜே பிளாக் எனும் சுதன் குமார் சக்சஸ் ஸ்டோரி

எல்லாரும் எனக்கு இசை ரொம்ப பிடிக்கும் சொல்லுவாங்க. ஆனா எனக்கு அப்படி இல்ல. எங்க வீட்டுல வாங்குன கடன அடைக்கத்தான், நான் மியூசிக் உள்ள வந்தேன்- டிஜே பிளாக்

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
DJ Black

DJ Black @ Sudhan Kumar

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பவர்களுக்கு டிஜே பிளாக் பற்றி தெரியாமல் இருக்காது. என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் நடுவராக, தொகுப்பாளராக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக டிஜே பிளாக் இருப்பார்.

Advertisment

வழக்கமாக டிஜே என்றால் வெவ்வேறு இசைக் கோர்வைகளை ஒரே ஃப்ளோவில் மாற்றி மாற்றி பிளே செய்வார்கள், ஆனால் டிஜே பிளாக் அந்த விதியை மாற்றி, கவுண்டர் அடிப்பது, பாடலிலே பதில் சொல்வது, கலாய்ப்பது என அனைத்தையும் செய்து அதிலேயே பிரபலமானார். அதிலும் குறிப்பாக சொல்லப் போனால் டிஜே பிளாக்கின் டைமிங் சென்ஸ், அவருக்குள் இருக்கும் ஒரு நகைச்சுவை கலைஞரும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். அதன் அடுத்த கட்டமாக சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக டிஜே பிளாக் கலந்து கொண்டார். அவரை பற்றிய ஒரு தொகுப்பு…

யார் இந்த டிஜே பிளாக்?

டிஜே பிளாக். இவரின் உண்மையான பெயர் சுதன் குமார். வியாசர்பாடி கன்னிகாபுரம் தான் இவர் ஊர். படித்தது எல்லாம் அரசு பள்ளியில். அரசு மாணவர்களுக்கு கொடுத்த இலவச லேப்டாப் தான் சுதன் வாழ்க்கையை மாற்றியது. அப்போது நண்பர்களிடம் கேம்ஸ், மூவி, சாங்ஸ் என கேட்டு வாங்கி லேட்பாட்டில் ஏற்றி உள்ளார். அதில் ஒரு கேம் உடன் தற்செயலாக டிஜே சாஃப்ட்வேரும் இருந்துள்ளது. அது என்ன என்று சுதன் ஆராயும் போதுதான், அவரது நண்பர்கள் இதை ஏன் நீ ஒரு  வேலையாகவே செய்யக்கூடாது என்று ஆலோசனை சொல்ல சுதனும் சுயமாகவே அதை கற்க ஆரம்பித்து, அதில் மூழ்கிவிட்டார்.

வாய்ப்புகள் எப்போதும் நம்மை தேடி வராது. சில நேரங்களில் நாம்தான் அதை உருவாக்க வேண்டும். அப்படித்தான் சுதன், தன் சித்தப்பா மகளின் பிறந்தநாளின் போது தான் கற்ற டிஜே-வை வாசிக்க தொடங்கினார். அது அப்படியே பரவி கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகள், சின்ன சின்ன விசேஷங்கள் என பிளே பண்ண ஆரம்பித்துள்ளார். டிஜே மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அதுவரை படித்து வந்த பொறியியல் படிப்பை பாதியிலே விட்டு, விஸ்காம் படிப்பில் சேர்ந்தார் சுதன்.

இனி டிஜே பிளாக் பற்றி அவரே கூறுகிறார்,

எல்லாரும் எனக்கு இசை ரொம்ப பிடிக்கும் சொல்லுவாங்க. ஆனா எனக்கு அப்படி இல்ல. எங்க வீட்டுல வாங்குன கடன அடைக்கத்தான், நான் மியூசிக் உள்ள வந்தேன். நான் விஸ்காம் படிக்கும் போது, என்னோட ஃபிரெண்ட் ஒரு பார்ல டிஜே-வுக்கு ஆள் இருக்கு சொன்னான். நான் அங்க வேலைக்கு சேர்ந்தேன். அந்த கிளப்புல நிறைய கத்துக்கிட்டேன்.

ஆனா இதுல இருந்து அடுத்து  கட்டத்துக்கு போகனும் நினைக்கும் போதுதான், எனக்கு ஃபேஸ் புக்ல டிஜே ஸ்ரீதர் நட்பு கிடைச்சது. அவர் நிறைய செலிபிரிட்டீஸ், பெரிய பெரிய ஷோஸ் பண்ணிட்டு இருந்தாரு. அவர்கிட்ட எனக்கு கத்த தர முடியுமான்னு கேட்டேன். அவரும் ஒகே சொன்னார். ஆனா அதுக்கு என்கிட்ட காசு எதுவுமே வாங்கல. அவங்க கிட்ட இருந்துதான் எனக்கு விஜய் டிவி காண்டெக்ட் கிடைச்சது. டிஜே கவுதம் அண்ணாதான் என்னை கூப்பிட்டாங்க. முதல் பாட்டு போடும்போதே திட்டு வாங்கிட்டேன். வேலை தெரியாத பசங்களலாம் எதுக்கு அனுப்புறீங்க சொல்லி திட்டிட்டாங்க.

ஆரம்பத்துல போட்டியாளர்கள் பெயருக்கு ஏத்த மாதிரி பாட்டு போடுவோம். அப்படிதான் ஒரு எபிசோடுல, வடிவேல் கவுண்டர் போட்டோம். அந்த இடமே அப்படியே மாறிடுச்சு. எல்லாருமே சிரிக்க ஆரம்பிச்சாங்க.

அதுக்கு முன்னாடி வரை எடிட்ல தான் நிறைய ரியாக்ஷன்ஸ் சேர்ப்பாங்க, ஆனா இதனால ஆன் த ஸ்பாட்ஸ் ரியாக்ஷன் வந்தது. இதை பார்த்துட்டு சேனல்ல இருந்து, இதை நீங்க ஒரு ஃபார்மெட்டா யூஸ் பண்ணிக்கோங்க. இதுல இருந்து எவ்வளவு காமிக்கெல்லா மாத்த முடியுமோ மாத்திக்கோங்க சொன்னாங்க.

பிறகு சூப்பர் சிங்கர் ஷோவுல இருந்து கவுதம் அண்ணாவுக்கு கால் வந்தது. அவரு எனக்கு போன் பண்ணி, நான் ஊருல இல்ல, நீ போயி பாத்துக்கோ சொன்னாரு. அன்னைக்கு மார்ச் 7. எஸ்.டி.ஆர். எபிசோடு. அவரு வர கொஞ்சம் லேட் ஆகும். அந்த டைம் பில் அப் பண்றதுக்குதான் கூப்பிட்டாங்க. அப்போ நான் பிளே பண்ணது கேட்டு, ஜட்ஜஸ் எல்லாரும் பாராட்டுனாங்க. யாரு வந்துருக்கானு கேட்கும் போது பிரியங்கா அக்காதான் முதல்ல பாராட்டுனாங்க. எல்லாரும் டிஜே பிளாக் ஆக பெரிய கைத்தட்டல் கொடுங்க சொல்லி அவுங்க ஆரம்பிச்சு விட்டதுதான்.

இந்த டிஜே பிளாக் எப்படி வந்தது?

டிஜே ஷேடோ, டிஜே சுதன் இப்படி நிறைய பேரு வைக்கலாம் யோசிச்சோம். இதெல்லாம் ரொம்ப நார்மல்லா இருந்தது. என் ஃபிரெண்ட் சிராஜ்தான் டிஜே பிளாக் வைக்கலாம் சொன்னான். அந்த பிளாக் பெயர்னால நிறைய பிரச்னையும் வந்தது. என் கலர் பத்தி பேசுற மாதிரி இருக்கிறதா நிறைய பேரு சொன்னாங்க. ஆனா, அது என்ன பாதிக்கல. ஏன்னா நான்தான் அந்த பெயரை வச்சுக்கிட்டேன். ஒருத்தரை கிண்டல் பண்றதுக்கும், கலாய்க்கிறதுதான் அந்த கருப்ப யூஸ் பண்ணோம். ஆனா பாராட்டுறதுக்கும் அந்த பெயர் யூஸ் ஆகும் போது சந்தோஷமா இருந்தது.

அப்புறம் குக் வித் கோமாளி ஷோ. அதுல மதுரை முத்து அண்ணாவுக்கு மதுரை வீரன் கவுண்டர் போட்டது, பாபா பாஸ்கர் மாஸ்டர், புகழ்க்கு மாரி படம் மியூசிக் போட்டது எல்லாம் நல்ல ஹிட் ஆச்சு. எப்போவுமே நம்ம வளரும் போது நிறைய தடங்கல் வரும். அப்படித்தான் நான் பண்றது எல்லாம் டிஜே இல்ல, இதைத்தாண்டி டெக்னிக்கல்லா நிறைய விஷயங்கள் இருக்கு சொன்னாங்க.

அப்போதான் சூப்பர் சிங்கரோட சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ் ஷோ எனக்கு ஒரு திருப்புமுனையா இருந்தது. அந்தமாதிரி ஒரு பெரிய ஷோவுல ஒரு டிஜே-வ மியூசிஷியனா நடத்துனாங்க. அன்னைக்கு ஆரம்பிச்ச விஷயம் தான் நான் இன்னைக்கும் ஒரு டீம் ஓட வெளியே போயி பெர்ஃபார்ம் பண்ண முடியுது.

நமக்கு நிறைய கனவுகள் இருக்கும். இன்னைக்கு எல்லாமே என்னால பண்ண முடியுது. அந்த ஆசையெல்லாம் நிறைவேத்திக்க முடியுது. அதுக்கு காரணம் டிஜே தான். ஆனா அதைவிட முக்கியமா எனக்கு ஆதரவா இருந்தது என்னோட அம்மா.

என் குடும்பத்துல நிறைய கஷ்டம் இருந்தது. எதுவா இருந்தாலும் என் அம்மாதான் பாத்துப்பாங்க, ஆனா, இப்போ நான் சம்பாதிச்ச பிறகு  என் அம்மாவ இட்லி கடை போடாதீங்க சொன்னேன். அவுங்க கேட்கல. நான் வீடு கூட மாத்திரலாம் சொன்னேன். ஆனா என் அம்மா இந்த ஊர விட்டு வரமாட்டேன் சொல்லிட்டாங்க.

நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும், இந்த சமூகம்தான் ஒருத்தனோட வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமா இருக்கும். என்னோட வளர்ச்சிக்கு என்னோட சமூகம் ரொம்ப முக்கியமா இருக்கு. இந்த சமூகத்துக்கு நிறைய திருப்பி செய்யணும் ஆசை.

என் ஏரியாவுல நிறைய பசங்க, ஃபுட் பால் விளையாடுறாங்க. ஊட்டில ஒரு டோர்னமெண்ட் நடந்தது. பிளாக் ஸ்குவாட் சொல்லி என் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு டீம் அமைச்சேன். பயங்கரமா விளையாடி கப் விண் பண்ணிட்டாங்க.

அப்புறம் சீசன் 7ல அனிருத் கெஸ்ட்-ஆ வந்தாங்க. அந்த லாஞ்ச் எபிசோடுல அவர் என்னை ஸ்டேஜ்க்கு கூப்பிட்டு, எல்லா நடுவர்களும் எழுந்து நின்னு கைத்தட்டி பாராட்டுனாங்க. குறிப்பா சொல்லனும்னா ரஹ்மான் சார் பாராட்டுனது, அந்த வீடியோ கிளிப்பை என்னோட இன்ஸ்டாகிராம்ல பின் பண்ணி வச்சிருக்கேன். மத்தவங்க பாக்கணும் இல்ல. அவர் பேசுனது என்னை நியாபகப்படுத்திட்டே இருக்கனும்தான். இதுவரைக்கும்நான்  எந்த விருதும் வாங்கல, ஆனா அவர் என்னை பாராட்டுனதுதான் ஒரு பெரிய விருதா நான் ஃபீல் பண்றேன்.

டெலிவிஷன் ஷோ தவிர, சினிமா நிகழ்ச்சிகள்ல நிறைய பிளே பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. மெர்சல் ஆடியோ லான்ஞ் தொடங்கி, பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ஞ் வரைக்கும் பிளே பண்ணிருக்கேன். யுவன் கான்செர்ட்ல ஒபனிங் ஆக்ட் பண்ணேன். அது என்னால மறக்கவே முடியாது. இந்த மாதிரி தொடர்ந்து நிறைய செய்யணும் ஆசை.

அதேமாதிரி மியூசிக்ல அடுத்து என்ன செய்ய போற நிறைய பேரு கேட்கிறாங்க, எனக்கு பெரிய கனவு எல்லாம் கிடையாது. ஒரு கடன் இல்லாத வாழ்க்கை. அதுதான் முன்னாடி என் கனவா இருந்தது. இப்போ ஓரளவுக்கு அதை சரி பண்ணிட்டேன். இப்போ மியூசிக் புரோடக்‌ஷன் சைட்ல நிறைய வேலை பாக்குறோம். நான், சாம் விஷால் எங்களோட பேச்சுலர் பேண்ட் சேர்ந்து நிறைய சிங்கிள் ரிலீஸ் பண்ணலாம் பிளான் பண்ணிருக்கோம்.

நிறைய ஃபங்ஷன்லாம் போகும்போது அங்க நிறைய பேரு வந்து பேசுவாங்க, உங்க வொர்க் எல்லாம் பாத்துருக்கேன், யுஸ், யுகே-ல எல்லாம் நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க சொல்லும்போது சந்தோஷமா இருக்கும். தொடர்ந்து என்னை மாதிரி டெக்னிஷியன்ஸ்க்கு சப்போர்ட் கொடுக்கிற ரசிகர்கள், இன்னும் நிறைய திறமைசாலிகள் இருக்காங்க, அவுங்க எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணனுங்கிறது என்னோட ஆசை என்று முடிக்கிறார் இந்த கருப்பு அழகன் டிஜே பிளாக் எனும் சுதன் குமார்.

டிஜே பிளாக் Tamilnadu Now யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இருந்து இந்த செய்தி உருவாக்கப்பட்டது.  அந்த வீடியோ இங்கே..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment