Advertisment

இதெல்லாம் உனக்கு தேவையா? ஃபரினா வெண்பா போட்டோவுக்கு நெட்டிசன் கமெண்ட்!

கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது.

author-image
WebDesk
New Update
Farina Azad

Do you need all this? Netizen comment on Fairna Azad photo

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.

Advertisment

டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.

ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம் அவரை தமிழ் சீரியல் உலகில், நம்பிக்கைக்குரிய வில்லிகளில் ஒருவராக்கியது.

ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

தன் கர்ப்பத்தை வெளி உலகத்துக்கு அறிவித்தது முதல், தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலும் கர்ப்ப காலத்தில்’ ஃபரினா எடுத்த சில போட்டோஷூட்கள் பல விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இப்போது ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. அதில் ஃபரினா வெள்ளை நிற ஷர்ட், ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து, கடலோரத்தில் நின்று எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த படம் மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

publive-image

அதில் ஃபரினா, பிங்க் நிறத்தில் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்க, ஒருவர் ஓ இப்படி கூட ஹைட் மேட்ச் பண்ணலமா, இதெல்லாம் உனக்கு தேவையா, மாடர்ன் ஃபிஷர் வுமன் என நெகட்டிவாக கமென்ட் செய்து வருகின்றனர்.

ஆனாலும் ஒருசிலர், சோ நைஸ், அழகு, பிரெட்டி, சூப்பர், லவ்லி, கியூட் ஒவர்லோடட் எனவும் பாசிட்டிவாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment