Advertisment

இம்யூனிட்டி இங்க இருக்கு... முருங்கைக் கீரை ரசம் வச்சுப் பாருங்க!

Drumstick leaves recipe: இந்த முருங்கைக் கீரையில் ரசம் வைத்துச் சாப்பிட்டால், உங்கள் இம்யூனிட்டி அதிகரிக்கும் என்பது நிஜம். செய்முறையை இங்கு பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இம்யூனிட்டி இங்க இருக்கு... முருங்கைக் கீரை ரசம் வச்சுப் பாருங்க!

Drumstick leaves Rasam Tamil News, Drumstick leaves recipe: நம்மகிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு! நம்ம வீட்டுக் கொல்லையில் சும்மா விளையுற பொருளில் எவ்வளவு சத்துகள் மிகுந்திருந்தாலும், அதை பயன்படுத்த மாட்டோம். அதேசமயம், அவ்வளவாக சத்தே இல்லாத ஒரு பொருளை சூப்பர் மார்க்கெட்டில் வைத்திருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவோம்.

Advertisment

அப்படி நம் வீட்டுப் பக்கத்திலேயே கிடைத்தும், நாம் மிஸ் செய்கிற ஒரு உணவுப் பொருள் முருங்கைக் கீரை. இதில் விட்டமின், இரும்புச் சத்து, மினரல்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் மகத்துவமும் இதற்கு உண்டு. இந்த முருங்கைக் கீரையில் ரசம் வைத்துச் சாப்பிட்டால், உங்கள் இம்யூனிட்டி அதிகரிக்கும் என்பது நிஜம். செய்முறையை இங்கு பாருங்கள்.

Drumstick leaves Rasam: முருங்கைக் கீரை ரசம்

முருங்கைக் கீரை ரசம் வைக்கத் தேவையான பொருட்கள் :

புளித் தண்ணீர் - 1 கப், முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி, பூண்டு - 5 பற்கள், உப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - ஒரு டீ ஸ்பூன், சீரகம் - 1 டீ ஸ்பூன், மிளகு - 1 டீ ஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - 1 டீ ஸ்பூன், கடுகு - 1/2 டீ ஸ்பூன், சீரகம் - 1 டீ ஸ்பூன், கருவேப்பிலை- கொத்தமல்லி தேவையான அளவு.

முருங்கைக் கீரை ரசம் செய்முறை :

கடாயில் முருங்கைக் கீரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி லேசாக கிண்டி வேக விடவும். வெந்ததும் அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் புளித் தண்ணீரைக் கரைத்து வாசனை போகும் அளவுக்கு நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் கீரையைப் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

அடுத்ததாக பெருங்காயப் பொடி , சீரகம், மிளகு, பூண்டு , ஒரு தக்காளி என சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதை தற்போது கொதிக்கும் கீரையில் போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிய விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து விடுங்கள். பிறகு ரசமாக பொங்கி வருவது போல் நுரை பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது முருங்கைக் கீரை ரசம் ரெடி. செய்து, உண்டு மகிழுங்கள்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment