Advertisment

ஆன்லைன் மூலம் ஆதார் பெறுவது எப்படி? இ-ஆதார் டவுன்லோட் கூட ஈஸி தான்

e-Aadhaar: உங்களுடைய முழு பெயர் மற்றும் அஞ்சல் குறியீடும் (pin code) தேவைப்படும். பதிவிறக்கம் செய்த பிறகு குடியிருப்பாளருக்கு அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு OTP வரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
e aadhar card download uidai aadhar aadhar number aadhar enrollment number, ஆதார் எண், ஆன்லைன் மூலம் ஆதார் பெறுவது எப்படி, இ-ஆதார்

e aadhar card download uidai aadhar aadhar number aadhar enrollment number, ஆதார் எண், ஆன்லைன் மூலம் ஆதார் பெறுவது எப்படி, இ-ஆதார்

Aadhaar Card online: உங்கள் ஆதார் அட்டையின் மின்னணு நகலையும் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருவர் அவருடைய ஆதார் அட்டை அல்லது மின்னணு ஆதார் அட்டையை எளிதாக இரண்டு மூன்று படிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வலைதள முகவரியான uidai.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisment

உங்கள் மின்னணு ஆதார் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படும் என்பதையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் ஆதார அட்டையைப் போல அதன் மின்னணு நகலும் ஆதார் தொடர்பான அனைத்து நோக்கங்களுக்கும் சமமாக செல்லுபடியாகும்.

மானியத்துடன் வீடு கட்ட கடன்: நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்தச் சலுகையை கவனித்தீர்களா?

உங்கள் மின்-ஆதார் அட்டையை (e-Aadhaar) பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் நீங்கள் முதலில் Adobe Reader ஐ பதிவிரக்கம் செய்து உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஆதார் அட்டையின் நகலைப் பதிவிறக்கம் செய்யும் எவரும் Adobe Reader நிறுவப்பட்டு இருந்தால் தான் மின்னணு ஆதாரை பார்க்க முடியும்.

ஆதார் அட்டையை எப்படி பெறுவது? மின்னணு ஆதார் அட்டையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

அனைத்து குடியிருப்பாளர்களும் (residents) மின்னணு ஆதார் அட்டையை இரண்டு வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வலைதளத்துக்கு சென்று “My Aadhaar” பிரிவின் கீழ் உள்ள “Download Aadhaar”. என்பதை சொடுக்கவும்.

பதிவு எண் (Enrollment number) மூலம்

28 இலக்கங்களைக் கொண்ட உங்களுடைய பதிவு எண் உங்களுக்கு தேவைப்படும். உங்களுடைய முழு பெயர் மற்றும் அஞ்சல் குறியீடும் (pin code) தேவைப்படும். பதிவிறக்கம் செய்த பிறகு குடியிருப்பாளருக்கு அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு OTP வரும். ஒருவர் OTP க்கு பதிலாக Time-based One-time Password algorithm யும் பயன்படுத்தலாம், இது ஆதார் மொபைல் ஆப்பை உருவாக்க முடியும் - mAadhaar.

மத்திய அரசு உதவி... ஸீரோ பாலன்ஸ் அக்கவுன்ட்: உங்கள் வீட்டு வாண்டுகளுக்கான அவசிய செய்தி

ஆதார் எண் மூலம்

உங்களுடைய பதிவு எண் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம். உங்கள் பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டை உள்ளீடு செய்யய்ம் செயல்முறை பின்பற்றப்படும். குடியிருப்பாளர்கள் அவர்களுடைய கைபேசியில் ஒரு OTP ஐ பெறுவார்கள். கைபேசி ஆப்பை பயன்படுத்தியும் Time-based One-time Password உருவாக்க முடியும்.

உங்களுடைய மின்னணு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யும் போது ஆதார் PDF அட்டையை திறக்க உங்களுக்கு கடவுச்சொல் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் (in capital) மற்றும் உங்கள் பிறந்த ஆண்டு ஆகியவற்றின் கலவைத்தான் உங்கள் கடவுச்சொல். நீங்கள் பதிவிறக்கும் போது தெரியும் ‘Masked Aadhaar’ என்ற விருப்ப தேர்வும் இருக்கும். பதிவிறக்கம் செய்யப்பட்ட வடிவத்தில் உங்கள் ஆதார் எண்ணை மறைக்க இது உங்களை அனுமதிக்கும். எனவே நீங்கள் எண்ணை மறைக்க விரும்பினால் பதிவிறக்கம் செய்யும் முன் இந்த விருப்ப தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment