இனிப்பு பிரியரா நீங்க? 15 நிமிஷத்துல சுட சுட ஜிலேபி தயார்!

வெறும் 15 நிமிடங்களில் உங்களால் ஜிலேபியை தயாரிக்க முடிந்தால், எப்படி இருக்கும்?

By: August 30, 2020, 8:02:19 AM

Easy Jalebi Recipe In Tamil: மாலை தேநீருடன் தட்டில் சூடான, மிருதுவான ஜிலேபி இருந்தால் எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் கடைகளில் வாங்குவது அவ்வளவு பாதுகாப்பில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். அதனால் வெறும் 15 நிமிடங்களில் உங்களால் ஜிலேபியை தயாரிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? அதற்கு எந்த ஆடம்பரமான பொருட்களும் தேவையில்லை. எங்களை நம்பவில்லையா? கீழே பாருங்கள்.

இது நம்ம ’பாண்டவர் இல்லம்’ கயலா? – என்ன ஒரு மாற்றம்!

தேவையானப் பொருட்கள்

1 கப் – ஆல் பர்பஸ் மாவு அல்லது மைதா

2 டீஸ்பூன் – நெய்

1 தேக்கரண்டி – பேக்கிங் பவுடர்

1/4 டீஸ்பூன் – ஃபுட் கலர்

1 கப் – நீர்

பாகு காய்ச்ச…

1 கப் – சர்க்கரை

1 கப் – நீர்

2 – ஏலக்காய்

செய்முறை

பாகு தயாரிப்பதில் இருந்து இந்த செயல்முறையை தொடங்குங்கள். கயாடில் ஒரு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் மற்றும் 2 ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருங்கள், இறுதியில் தெளிவான சர்க்கரை பாகு கிடைக்கும்.

‘பிளாக் பந்தர்’ புகழ் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் மரணம்

ஒரு பாத்திரத்தில், மைதா, 2 டீஸ்பூன் நெய், பேக்கிங் பவுடர் மற்றும் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றை நன்றாக கலக்கவும்.

இந்த கலவையில் தண்ணீரைச் சேர்த்து, அது தண்ணீர் பேஸ்ட்டாக மாறும் வரை கலக்கவும். பின்னர் முனை கொண்ட ஒரு பாட்டிலுக்கு அந்த கலவையை மாற்றவும். நடுத்தர வெப்பத்தில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் சூடானதும், அதில் ஜிலேபிகளை பிழியவும். அவை பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை பொரிக்கவும்.

ஜிலேபி வெந்ததும், அவற்றை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும். 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, பின்னர் தட்டுக்கு மாற்றவும். இறுதியாக நறுக்கிய பிஸ்தா கொண்டு அதை அலங்கரிக்கவும்.

அவ்வளவு தான் ஜிலேபி ரெடி!

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Easy jalebi recipe instant jalebi method jalebi video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X