சட்டென ரெடியாகும் இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி

Easy Tomato chutney Tamil செய்வது மட்டுமல்ல சுவையும் சுண்டி இழுக்கும் விதமாகவே இந்த சட்னி இருக்கும்.

Easy Tomato chutney Tamil செய்வது மட்டுமல்ல சுவையும் சுண்டி இழுக்கும் விதமாகவே இந்த சட்னி இருக்கும்.

author-image
WebDesk
New Update
Easy Tomato chutney Instant Tomato Chutney Recipe Breakfast recipes Tamil

Instant Tomato Chutney Recipe

Easy Tomato chutney Recipe Breakfast recipes Tamil : காலையில் எழுந்து உணவுகளை சமைப்பது என்பது பலருக்கும் மிகப் பெரிய வேலை. அதுபோன்ற நேரங்களில் நிச்சயம் கைகொடுக்கும் இந்த இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி. செய்வது மட்டுமல்ல சுவையும் சுண்டி இழுக்கும் விதமாகவே இந்த சட்னி இருக்கும்.

Advertisment

தேவையான பொருள்கள்

தோராயமாக நறுக்கப்பட்ட மீடியம் அளவு தக்காளி - 4

கறிவேப்பிலை - 1 ஸ்ப்ரிங்

Advertisment
Advertisements

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்

எண்ணெய் (முன்னுரிமை தேங்காய் அல்லது எள்) - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

* கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு சேர்க்கவும்.

* கடுகு வெடித்ததும், அதில் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அவை சுமார் 20 விநாடிகளில் பொன்னிறமாகிவிடும். அந்த நேரத்தில், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூளைச் சேர்த்து, கூடவே கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

* எல்லாவற்றையும் நன்கு கலந்து, தக்காளி வதங்கும் வரை காத்திருக்கவும். இதற்கு சில நிமிடங்களுக்கு மேல் ஆகக்கூடாது. சட்னி வறண்டு காணப்படுவதாக நீங்கள் நினைத்தால், ஓரிரு டீஸ்பூன் தண்ணீரைச் சேர்க்கவும்.

* தக்காளியிலிருந்து எண்ணெய் தனியே பிரிந்து வரும் நேரத்தில், கலவையை நன்கு மசித்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சட்னி தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: