ஃப்ரெஞ்ச் ஃபரைஸ் சாப்பிட்டால் வழுக்கை தலையில் முடி வளரும்!

ஃப்ரெஞ்ச் ஃபரைஸ் எனப்படும் உருளைக்கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பிடித்தமான உணவுப்பொருளாகும். அதன்மூலம் வழுக்கையை சரிசெய்ய முடியும்!

ஃப்ரெஞ்ச் ஃபரைஸ் எனப்படும் உருளைக்கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பிடித்தமான உணவுப்பொருளாகும். அதனை, தக்காளி சாஸில் டிப் செய்து சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்கு ஈடு இணையே இல்லை என்று கூட சொல்லலாம்.

இந்த ஃப்ரெஞ்ச் ஃபரைஸ் பிரியர்களுக்கு இப்போது சொல்லக்கூடிய செய்தி ஆனந்தத்தை தரலாம். ஜப்பானில் உள்ள தேசிய யோக்கோஹோமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில், ஃப்ரெஞ்ச் ஃபரைஸில் உள்ள டை மீத்தைல் பாலிசிலாக்ஸேன் (dimethylpolysiloxane) எனப்படும் வேதிப்பொருள், வழுக்கை தலையாக உள்ளவர்களுக்கு முடி வளர துணைபுரிவதாக கண்டுபிடித்துள்ளது. ஃப்ரெஞ்ச் ஃபரைஸ் செய்ய செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெயில் அந்த வேதிப்பொருள் உள்ளதாக கூறப்படுகிறது.

உடனடியாக, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் காதலர்கள் துள்ளிக்குதிக்க வேண்டாம். ஏனெனில், தங்களுடைய ஆராய்ச்சி தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக, அந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அதிலும், குறிப்பாக, மெக்டொனால்ட்ஸ் ஃப்ரெஞ்ச் ஃபரைஸ்க்கும், வழுக்கையை சரிசெய்யும் சிகிச்சைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

முடியை மீண்டும் வளரச்செய்வதில், எச்.எஃப்.ஜி. எனப்படும் ஹேர் ஃபாலிக்கிள் ஜெர்ம் (Hair follicle germ) எனப்படும் உற்பத்தி செய்வதே மிகப்பெரும் தடையாக உள்ளது என கருதப்படுகிறது. அதனால், இந்த ஆராய்ச்சியின் மூலம், எச்.எஃப்.ஜி.யை அதிகளவில் உருவாக்கும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்முறை மூலம் ஒரே சமயத்தில் 5,000 எச்.எஃப்.ஜி.யை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close