Advertisment

முட்டை வேக வைக்கும் போது இந்த தவறு மட்டும் செய்யாதீங்க

மென்மையான வேகவைத்த முட்டை எந்த உணவிற்கும் பர்ஃபெக்ட் ஆக இருக்கும். ஆனால் சரியான மென்மையான வேகவைத்த முட்டையை சமைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Egg

Best way to boil eggs (Image Source: Freepik)

முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் முட்டைகளை சரியாக வேக வைப்பதும், அதிலிருந்து ஓட்டை உரிப்பதும் எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.

Advertisment

முட்டைகளை உரிக்கும்போது கைகள் சூடாமல் இருக்க முதலில் குளிர்ந்த நீரில் அவற்றை வைக்க வேண்டும். சில நேரங்களில் முட்டை சரியாக வேகவில்லை என்றால், ஓட்டுடன் ஓட்டிக் கொண்டு தொல்லை செய்யும்.

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, உங்களுக்கான சரியான தந்திரம் எங்களிடம் உள்ளது, இது ஒவ்வொரு முறையும் முட்டைகளை சரியாக வேகவைத்து உரிப்பதை உறுதி செய்யும்.

என்ன செய்ய வேண்டும்?

Egg cooking tips

பிரிட்ஜில் இருந்து நேராக எடுத்து பயன்படுத்தக்கூடாது

அறை வெப்பநிலையில் இருக்கும் முட்டைகளைப் பயன்படுத்தவும், பிரிட்ஜில் இருந்து நேராக எடுத்து பயன்படுத்தக்கூடாது. குளிர்ந்த முட்டைகளை கொதிக்கும் நீரில் சேர்க்கும் போது வெப்பநிலையில் ஏற்படும் தீவிர மாற்றம் முட்டை ஓட்டில் விரிசலை ஏற்படுத்தும்.

முட்டைகளைச் சேர்ப்பதற்கு முன் எப்போதும் தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருங்கள், இல்லையெனில் நீங்கள் அதை உரிக்க முயற்சிக்கும்போது ஓடு,  முட்டையின் வெள்ளைக்கருவில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

என்ன ஈஸியாக இருக்கிறதா?

இனி முட்டை வேகவைக்கும் போது இந்த தந்திரத்தை பயன்படுத்தி, முட்டை ஓடுகளே எளிதாக உரியுங்கள்..

இதையும் நோட் பண்ணுங்க..

முட்டைகள் கெட்டு விட்டதா என்பதை கண்டுபிடிக்க, அவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரில் வைக்கவும். முட்டைகள் பாத்திரத்தில் கீழே தங்கினால் அவை புதியவை. அவை நின்றால், முட்டைகள் 2-3 வாரங்கள் பழமையானவை, ஆனால் அவை மிதந்தால், முட்டைகள் மிகவும் பழையவை என்று அர்த்தம்; அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment