Advertisment

பெண்களின் நீண்டகால சிறுநீர்ப்பை பிரச்சனைகளை தடுக்கும் எட்டு வழிகள்!

தேவைப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் நாம் கழிப்பறை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கிறோம். எனவே 2- 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்றுவது, நீண்ட காலத்திற்கு சிறுநீரைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண்களின் நீண்டகால சிறுநீர்ப்பை பிரச்சனைகளை தடுக்கும் எட்டு வழிகள்!

Tamil Health Update For Women : உயிரினங்கள் அனைத்திற்கும் உடல் ஆரோக்கியம் என்பது இன்றயமையான அவசியம். அதிலும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கிய தேவையாகும். பெண்கள் வயதாகும்போது தங்கள் சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரையில் சில சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்குகிறார்கள். எனவே உடலைப் பற்றி அறிந்து கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை குறிப்பாக சிறுநீர்ப்பை. இது சிறுநீரைச் சேமித்து வெளியேற்றும் ஒரு மீள் உறுப்பு ஆகும்.

Advertisment

பெங்களூர் ஃபோர்டிஸ் லா ஃபெம்மி  மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவராக இருக்கும் ரூபியானா ஷாநவாஸ் ஆரோக்கியமான சிறுநீர்ப்பை பழக்கங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது, நீண்ட கால சிறுநீர்ப்பை தொந்தரவுகளை தடுக்க உதவும் என கூறுகிறார். அதற்காக அவர் பரிந்துரைத்த எட்டு பழக்கங்கள் இதோ!

சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருங்கள்!

தேவைப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் நாம் கழிப்பறை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கிறோம். நீண்ட நேரத்திற்கு சிறுநீர் கழிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல. எனவே 2- 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்றுவது, நீண்ட காலத்திற்கு சிறுநீரைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுக்கிறது.

சிறுநீர் கழிப்பதில் தாமதம் வேண்டாம்!

பயணங்களின் போது எப்போதாவது சீறுநீர் கழிக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் தொடர்ந்து நீங்கள் சிறுநீர் வெளியேற்ற தாமதப்படுத்துவது சிறுநீர் கழிப்பதில் தொந்தரவுகளும், சீறுநீரக  தொற்றுக்கும் வழிவகுக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஓய்வெடுங்கள்!

இது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பொருந்தும். அவசரத்துடன் சிறுநீர் கழிக்கும்போது உங்களால் அதை முழுமையாக வெளியேற்ற முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுநீரைத் தக்கவைத்துக் கொள்வீர்கள், இது சிறுநீர் தொற்றுக்கு வழிவகுக்கும். உடல் தளர்வு என்பது வசதியாக அமர்ந்து இடுப்புத் தசைகளை தளர்த்துவதன் மூலம் சிறுநீர்ப்பையை முழுமையாக காலி செய்ய உதவும்.

போதுமான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

நாள் ஒன்றுக்கு 10- 12 கிளாஸ் தண்ணீர் அல்லது 2½- 3 லிட்டர் தண்ணீர் பருகுவதன் மூலம் நீரேற்றுடன் இருப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். தண்ணீர் மட்டுமே பருகுவது கடினமாக தோன்றினால், சூப், பழச்சாறு போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

காஃபின் கலந்த பானங்களை தவிர்க்கவும்!

டீ, காபி மற்றும் கோலா போன்ற காஃபின் கலந்த பானங்களை பருகுவது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது.

புகைப்பதை நிறுத்துங்கள்!

புகை பிடிப்பது ரத்தநாளங்களை சுருங்கச் செய்யும். இது சிறுநீர்ப்பை எரிச்சல் காரணமாக அவசரமாக சிறுநீர் வெளியேறும் அபாயத்தில் உங்களை வைக்கிறது. சிறுநீர் அடக்கும் திறனை மேம்படுத்த பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட இடுப்புத் தசை பயிற்சி அல்லது கெகல்(Kegel) பயிற்சிகளை மேற்கொள்வது  சிறந்தது. இதை செய்யும்போது உங்கள் சிறுநீர்பை காலியாக இருப்பது அவசியம். இது சிறுநீர் நடுவில் நிறுத்தப்படுவதை தடுக்கும். இந்த பயிற்சியை நாள் ஒன்றுக்கு 10- 15 முறை செய்வதால் சிறுநீர்ப்பைக்கு உதவும் இடுப்புத் தசைகள் பலப்படுத்துகிறது. வழக்கமான பயிற்சி, சிறுநீர் கசிவைத் தடுப்பதில் இருந்து உங்களை நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்.

உள்வயிற்று அழுத்தத்தை அதிகரிக்கும் தூண்டுதல்களை தவிர்க்கவும்!

உடல்பருமன், நாள்பட்ட இருமல் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக இடுப்புத்தசையில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது துணை தசைகளை தளரச் செய்து, சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும். எனவே சீரான உடல் எடை, நாள்பட்ட இருமல் மற்றும் மலச்சிக்கலை சரிசெய்து இடுப்புத் தசையில் அழுதத்த்தை குறைக்கவும். இந்த ஆலோசனைகளை பின்பற்றி பெண்கள் தங்களது உடல்நலத்தை மே்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Womens Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment