Advertisment

world emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா?

எமோஜிக்களுக்கு அளவே இல்லையென்றாலும் அர்த்தம் வேண்டாமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
emoji meaning

emoji meaning

emoji meaning : 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதிவிட்டு சென்ற வரியை இப்போது நினைத்து பார்த்தாலும் ஆச்சிரியம் தருகிறது. ”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில” இதுதான் இன்றைய தொழில்நுட்ப உலகின் நிலை.

Advertisment

பார்வையே போதும் வாய்மொழி வேண்டாம் என்ற காலம் போய், எமோஜியே போதும் என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். காதலை சொல்ல, வேண்டாம் என மறுக்க, சாப்பிட்டாச்சா என கேட்க, 'மிஸ் யூ'வில் ஆரம்பித்து 'கிஸ் யூ' வரை, எல்லாமே தற்போது எமோஜி மயம் தான். எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் எமோஜி மட்டும் தான் பதில்.

எமோஜிகள் வருவதற்கு முன்னர், கீபோர்டில் இருக்கும் குறிகளே நமக்கு கைக் கொடுத்து கொண்டிருந்தனர். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக மொபைல்களில் எமோஜி யூசேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்ணில் பட்டவையெல்லாம் சினிமாவாக மாற்றும் ஹாலிவுட்டின் கைகளில் இருந்து எமோஜிக்களும் தப்பவில்லை. எமோஜிக்களை வைத்து திரைப்படம் ஒன்றையே வெளியிட்டு இருக்கிறார்கள்.கணக்கிட்டு பாருங்கள் ஒருநாளைக்கு நீங்கள் சராசரியாக எத்தனை எமோஜிக்களை உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுடன் பகிறீர்கள். காதலி, ஃப்ரண்ட்ஸ், அம்மா, அப்பா, பாஸ், அலுவல குரூப் என நீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்களுக்கு அளவே இல்லையென்றாலும் அர்த்தம் வேண்டாமா?

இன்று நாடு முழுவதும் உலக எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜிக்களின் அர்த்தங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

publive-image

காதலனுக்கோ, காதலிக்கோ வைரத்தை பரிசாக அளிக்க வேண்டாம். வைரம் பதித்த இந்த இதயத்தை அனுப்பினாலே போதும்.

publive-imageகடும் கோபம். உங்களை கோவப்பட வைத்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த எமோஜி பயனளிக்கும்.

publive-image

அழறப்போ மட்டும்தான் கண்ணுல தண்ணி வருமா? செம ஜோக் ஒண்ணைக் கேட்கும்போதுகூட சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரும்ல... அப்போ தட்டுங்க இந்த எமோஜியை!

publive-image

எந்த ஒரு விஷய்த்தையும் பிளான் பண்ணி பண்ணனும் அப்படி பண்ணியும் சொதப்பிச்சுனா இப்படி தான் ஷாக் ரியாக்‌ஷனை தட்ட வேண்டும்.

publive-image

‘என்ன கொடுமை சார் இது?’ என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த எமோஜி. அடக் கண்றாவியே என்றுக் கூட தலையில் அடித்துக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.

publive-image

வெட்கம். உங்களை யாராவது வெட்கப்பட வைத்தால் அல்லது காதலில் வெட்கப்பட்டு கன்னம் சிவந்தால், அவர்களுக்கு இந்த எமோஜி கொண்டு பதில் கூறுங்கள்.

publive-image

‘சும்மா கடுப்ப கிளப்பாத’ என்று சொல்லாமல் சொல்லும் எமோஜி இது. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தால் செம்ம கடுப்பில் இருந்தால் இந்த எமோஜி போட்டு மெச்சேஜ் அனுப்புங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment