Advertisment

பெரியாரின் கொள்கைகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் அனிமேஷன்

திராவிட சித்தாந்தவாதி சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் திங்கள்கிழமை ‘எங்கள் பெரியார்’ என்ற கார்ட்டூன் தொடரின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engal Periyar cartoon series

Engal Periyar cartoon series for kids

புரட்சிகர திராவிட தலைவரின் கொள்கைகள் மற்றும் சமூக நீதி சித்தாந்தங்கள் குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பெரியாரியர்கள் ‘எங்கள் பெரியார்’ என்ற கார்ட்டூன் தொடரை உருவாக்கியுள்ளனர்.

Advertisment

எழுத்தாளரும், பெரியாரியருமான எழில் அரசனின் கூற்றுப்படி, இந்த 3டி அனிமேஷன் தொடர் சுயமரியாதை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற பலதரப்பட்ட தலைப்புகளை பேசும். தஞ்சாவூரைச் சேர்ந்த எழிலரசன் இதற்கான உள்ளடக்கத்தை உருவாக்கி உள்ளார். அனிமேட்டர் எம் ஸ்ரீதர் மற்றும் எஸ் எஸ் பாலாஜி ஆகியோர் தயாரிப்பு தரப்பில், ஃபைனல் டச் வழங்கி உள்ளனர்.

திராவிட சித்தாந்தவாதி சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் திங்கள்கிழமை ‘எங்கள் பெரியார்’ என்ற கார்ட்டூன் தொடரின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். இளைஞர்கள், குறிப்பாக பெண்களின் அதிகாரங்கள் குறித்து பெரியார் பேசுவதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வீரபாண்டியன் கூறினார்.

PKDK எனும் யூடியூப் சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

அந்த எட்டு நிமிடக் கதையில்’ ஒரு வயதான பாட்டி தன் பேரக்குழந்தைகளிடம், ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் என கதை சொல்கிறார். அதைக்கேட்ட பேரக்குழந்தைகள், பாட்டி போரடிக்குது வேற ஏதாவது சொல்லுங்க என கேட்கின்றனர்.

உடனே பாட்டி, உங்களுக்கு நம்ம பெரியார் தாத்தாவ தெரியுமா என கேட்க, உடனே குழந்தைகளும் ஓ தெரியுமே, வெள்ளை தாடி, கருப்பு சட்டை, வட்டமான கண்ணாடி போட்டுருப்பாரே அவர் தானே என கேட்கின்றனர்.

இப்படி பாட்டி, பெரியாரை அறிமுகப்படுத்தி, அவர் ஒரு நாள் ‘மூடநம்பிக்கை ஒழிப்பு’ பொதுக்கூட்டத்தில் உரையாற்றச் சென்றதாகத் தொடர்கிறார். அங்கிருந்து பெரியார் கதைக்குள் வருகிறார். ஒரு கருப்பு அம்பாசடர் காரில் இருந்து இறங்கும் பெரியார், மேடைக்கு சென்று மக்களிடம் பேசத் தொடங்குகிறார்.

சிறந்த எதிர்காலத்திற்காக மூடநம்பிக்கைகளுக்கு இரையாகாமல் இருக்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். சாதி மற்றும் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.

ஒவ்வொரு கான்செப்டிலும் ஏழு முதல் எட்டு கதைகள் இருக்கும். இந்தக் கதைகள் உண்மைச் சம்பவங்களைத் தொட்டு, பெரியாரின் பல்வேறு அம்சங்களை கூறும். “இது முதல் ஊரடங்கின் போது தொடங்கியது. பெரியாரின் சிந்தனைகளை குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல, அனிமேஷன் கார்ட்டூனைக் கொண்டு வருவதற்கான எங்களின் முயற்சிகள் நம்பிக்கையை அளித்தன என்று எழிலரசன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment