/tamil-ie/media/media_files/uploads/2022/01/Period-pain-mentrual-cramps.jpg)
Expert recommended tips to manage period pain
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வேறுபட்டது. சிலர் மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் காலத்தில் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிப்பதில்லை என்றாலும், சிலர் டிஸ்மெனோரியாவால் (dysmenorrheal) பாதிக்கப்படுகின்றனர், இது வலிமிகுந்த மாதவிடாய் காலங்களுக்கான மருத்துவச் சொல்லாகும்.
லேசான வலி இயல்பானது என்றாலும், கடுமையான வலியை அனுபவிக்கும் பெண்களுக்கு, வழக்கம் போல் தங்கள் நாளைக் கொண்டு செல்வது கடினமாக இருக்கும், குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் போது /அல்லது பயணத்தில் இருந்தால், ஓய்வு எடுக்க முடியாது.
நீங்கள் வலியை அனுபவித்தால் ஓய்வு மிகவும் முக்கியமானது என்றாலும், அதைச் சமாளிப்பதற்கான பிற வழிகள் உள்ளன.
தீவிர மாதவிடாய் வலி ஏற்பட்டால், "இப்யூபுரூஃபன் மற்றும் காம்பிஃப்ளாம் (Ibuprofen and Combiflam) போன்ற வலிநிவாரணி மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்". மேலும் "நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தால், மூச்சை ஆழமாக உள்ளிழுப்பது மற்றும் வெளியேற்றுவது போன்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை முயற்சிக்கவும்" என்று மருத்துவர் அஞ்சலி குமார், (மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறை, சிகே பிர்லா மருத்துவமனை, குர்கான்) கூறுகிறார்.
சூடாக நிறைய தண்ணீர் குடிக்கவும், கொழுப்பு உணவுகள், ஆல்கஹால், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காஃபின் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் மருத்துவர் ரூபம் அரோரா, (மூத்த ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர், கிளவுட்னைன் குழும மருத்துவமனைகள், படபர்கஞ்ச்) "மெஃபெனாமிக் மெஃப்டல்-ஸ்பாஸ்" (Mefenamic Meftal-spas) பரிந்துரைத்தார்.
“ஆனால், இது வலி ​​தொடங்கிய பிறகு எடுக்க வேண்டும், வலி ​​ஏற்பட்ட பிறகு அல்ல. நாளுக்கு ஒன்று என 3 நாட்களுக்கு, மூன்று மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மேலும், சுறுசுறுப்பாக இருக்கவும், மென்மையான மசாஜ் மற்றும் ரிலாக்சேஷன் டெக்னிக்கை முயற்சிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.
வலி கடுமையாக இருக்கும் பட்சத்தில் ஒரு நிபுணரை அணுகி, அதன் காரணங்களை வேரிலேயே புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க இரு மருத்துவர்களும் வலியுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us