Advertisment

டிஜிட்டல் ஸ்கீரினில் செலவிடும் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இதை அவசியம் பண்ணுங்க

Eye health tips| ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக கணினி அல்லது மொபைல் திரையில் செலவிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் தலைவலி, வறட்சி மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

author-image
abhisudha
New Update
Eye health

Eye health

20-20-20 Rule for Eye Health | உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி | நம்மில் பெரும்பாலோர் நமது நாளின் பாதிக்கு மேல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில் செலவிடுகிறோம். இது இயற்கையாகவே நம் கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Advertisment

லேப்டாப் ஸ்கீரின் முன் நீண்ட நேரம் செலவிடுவது கண் எரிச்சல், கண் சோர்வு மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான நபர்கள் கண் நோய்களுடன் வாழ்கின்றனர், இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் கண் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று விட்ரியோ-ரெட்டினல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மருத்துவர் என்எஸ் முரளிதர் கூறுகிறார்.

publive-image

மடிக்கணினியைப் பயன்படுத்தும்போதோ புத்தகம் படிக்கும்போதோ படுத்துக் கொள்ளாதீர்கள். அது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையின் கண் மருத்துவ ஆலோசகர் ரிஷி பரத்வாஜ், டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதால் உங்கள் பார்வைக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.

ஆனால், அது அசௌகரியம் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தலாம். சராசரி மனிதன் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 15 முறை கண் சிமிட்டுகிறான். திரைகளைப் பார்க்கும்போது இந்த சதவீதம் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது. இது வறண்ட, அரிக்கும் கண்களை ஏற்படுத்தும். இது computer vision syndrome (CVS) என்று அழைக்கப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

அப்படியானால், கண் சோர்வைத் தடுக்க ஏதேனும் வழி உள்ளதா? ஆம், இது 20-20-20 விதி!

இதை நீங்கள் எப்படி செய்யலாம்?

நீங்கள் டிஜிட்டல் ஸ்கீரினில் செலவிடும் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 20 வினாடிகள் சிறிய இடைவெளி எடுக்கவும். அந்த நேரத்தில், 20 அடி தூரத்தில் பார்க்கவும்.

இப்படி செய்வதால் டிஜிட்டல் ஸ்கீரினில் நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் கண் அழுத்தத்தைக் குறைக்கலாம், computer vision syndrome  தடுக்க திரையில் இருந்து அடிக்கடி இடைவெளிகள் அவசியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment