Face Pack News In Tamil: தோல் மற்றும் சரும பராமரிப்பிற்கு பலரும் பல்வேறு விதங்களில் மெனக்கெடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோலின் தன்மை இருக்கும்போதிலும் அவர்கள் எல்லாருக்கும் ஒரேவிதமான தோல் மற்றும் சரும பாதிப்புகளே ஏற்படுகின்றன. இயற்கையின் கொடையான இந்த தோல் மற்றும் சரும அழகு பராமரிப்பில் மேரிகோல்ட் பூ (கிரேந்தி பூ) முக்கிய அடிப்படை பொருளாக உள்ள முகப்பூச்சுவின் பங்கு அளப்பரியது. இந்த பூவில், தோலை மிருதுவாக்கும் ஊட்டசத்துக்கள் இதில் உள்ளன.
Advertisment
இந்த மேரிகோல்ட் பூவினால் ஆன முகப்பூச்சை வீட்டிலேயே தயாரிக்கலாம் . முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள், அழகை குறைக்கும் கோடுகள் உள்ளவர்களுக்கு இந்த முகப்பூச்சு இனிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை.
சோத்துக்கற்றாழை ஜெல், வேப்பம்பூ பொடி, மற்றும் மேரிகோல்ட் பேஸ் பேக்
வயது ஆக ஆக தோலுக்கு மிருதுதன்மை அளிக்கும் கொல்லாஜன் ஹார்மோனின் எண்ணிக்கை குறையத்துவங்கும். இதன்காரணமாக, முகத்தில் சுருக்கமும், முகம் டல் ஆக இருப்பது போன்ற உணர்வு தெரிய துவங்குகிறது. முகம் மற்றும் தோல் பராமரிப்பிற்கு இத்தகைய நேரத்தில் புது வாழ்வு அளிக்க இந்த முகப்பூச்சு ஆபாத்பாந்தவனாக விளங்கி வருகிறது. இந்த பேஸ்பேக்கை, சோற்று கற்றாழை ஜெல். மேரிகோல்டு பூ இதழ்கள், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அதனுடன் வேப்பம்பூ பவுடர் கலந்து தயாரிக்க வேண்டும்.
Marigold flower face pack: பேஸ்பேக் செய்யும் முறை
மேரிகோல்டு பூ இதழ்களை அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.அதனுடவ் வேப்பம்பூ பவுடரை கலந்துகொள்ளவும். பின் இதனுடன் சோற்றுக்கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். இதை பேஸ்ட் போல செய்துகொள்ளவும்.இதனுடன் சிறிதளவு பன்னீர் சேர்க்கவும். இந்த பேஸ்டை, முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்துகொள்ளவும். பிறகு 15 நிமிடம் ஊறவைத்த பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவவும்.
இந்தமாதிரி, வாரத்திற்கு 3 முறை செய்துவர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேரிகோல்டு பூ, மஞ்சள் மற்றும் பால்
மேரிகோல்டு பூவை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யும் அடுத்த பேஸ்பேக் இது.. இதில் மஞ்சள் இருப்பதால், மருத்துவ ரீதியாகவும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம், தோல் பாதிப்புகள் உள்ளிட்டவைகளுக்கும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம்.
உலர்ந்த மேரிகோல்டு பூ இதழ்களை அரை தேக்கரண்டி மஞ்சள், ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட் போல செய்துகொள்ளவும். இதை முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும்.பின் குளிர்ந்தநீரால் முகத்தை கழுவவும்.
இந்த இரண்டில் எந்த கிரீமை இன்று முயற்சித்து பார்க்கப்போகிறீர்கள்?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil