Face Pack Tamil News: கோடைகாலத்தில் உங்கள் சருமம் எண்ணெய் வழிந்து பிசுப்பிசுப்பாக உள்ளதா? இந்த இயற்கையான சரும பராமரிப்பு வழக்கம் உங்களுக்காக! இந்த எளிய வழிமுறைகள் கோடை காலத்தில் எண்ணெய் வழியும் பிசுபிசுப்பான சருமத்திற்கு விடைக்கொடுக்க உதவும்.
இந்த எளிய வழிமுறைகள் கோடை காலத்தில் எண்ணெய் வழியும் பிசுபிசுப்பான சருமத்திற்கு விடைக்கொடுக்க உதவும்.
சுத்திகரிப்பு
தயிரை முகத்தில் பூசி இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்துவிட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே உலர விடவேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி உலர்ந்த துண்டை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.
இந்த செயல்முறைக்கு பிறகு சோப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
ஸ்க்ரப்பிங்
இது உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன் சருமத்தில் இறந்த சரும செல்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறது. தலா ஒரு தேக்கரண்டி வீதம் தேன், தயிர் மற்றும் இன்ஸ்டண்ட் காபி தூள் ஆகியவற்றை எடுத்து அவற்றை நன்றாக கலந்து அதை முகத்தில் தடவவும்.
உங்களுக்கு முகப்பரு இருந்தால் இதை செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் முகத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும். முகப்பரு இல்லாதவர்கள் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
முகப் பூச்சு
ஒரு தேக்கரண்டி வீதம் தேன், கடலை மாவு, தக்காளி சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை எடுத்து அவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசவும். அது உலரும் வரை முகத்தில் அப்படியே விடவும்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை உலர வைக்கவும். இதன் பின் உங்கள் மாய்ஸ்சுரைசரை தடவவும்.
எளிய இயற்கையான வழிமுறைகளில் உங்கள் முகம் மற்றும் தோல் அழகை பராமரிக்கலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Face glow tamil news face glow with tomatto juice honey curd face beauty tips