நண்பர்கள் தான் உங்கள் ஹேக்கர்கள்... உஷாரா இருப்பதற்கு எச்சரிக்கை விடுக்கிறது இந்த பேஸ்புக் மோசடி!

ஏமாற்று வேலைகள் என்பது எல்லா வகையிலும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறன. ஆன் லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏமாற்று வேலைகள் என்பது எல்லா வகையிலும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறன. போலியான பொருட்களை விற்பது, எதிலும் கலப்படம் செய்வது என எதை எடுத்தாலும் ஏமாற்றத்தை கண்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், ஆன்லைன் என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், எண்ணற்ற மோசடிகள் தினம் தினம் நடந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 50 பில்லியன் டாலர் வரை மோசடியினால் மக்கள் இழந்து வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றன. நான்கு வீடுகளில், ஒரு வீடு என்ற கணக்கில் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு நடந்த பெரும்பாலான மோசடிகள் மொபைல் போன் மூலமாக தான் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் ஆன்லைன் மூலமாக தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக இணையதளம், ஈமெயில், சமூக வலைதளம் வாயிலாக தான் இந்த மோசடி சம்பவம் அரங்கேறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் இது போன்ற ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உங்கள் நண்பர் திடீரென ஒரு ஸ்கேமர் ஆனால் எப்படி இருக்கும் என யோசித்து பாருஙகள்? ஆம், அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஷெல்லி டிரம்மாண்ட். அவரது ஃப்ரண்டின் பேஸ்புக் ப்ரொஃபைல் மூலம் தான் இந்த மோசடி நடந்துள்ளது.

Facebook

டெபோரா பாய்ட் தான் அவரது ஃப்ரண்ட். திடீரென ஒரு நாள் டெபோரா பாய்டிடம் இருந்து ஷெல்லி டிரம்மாண்ட்கு பேஸ்புக் மெசென்ஜரில் மெசேஜ் செல்கிறது. அரசிடம் இருந்து எனக்கு ஒரு லட்சம் டாலர் கிடைத்திருக்கிறது. இந்த தொகையை பெறுவதற்கு 1500 டாலர் மற்றும் சுயவிவரங்களை அனுப்பினால் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினால் போதுமானது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்டு சந்தோஷப்பட்ட ஷெல்லி டிரம்மாண்ட், தனது ப்ரண்ட் தானே கூறுகிறார் இது உண்மையாக இருக்கும் என அப்படியே நம்பியிருக்கிறார். அதன்படியே ஷெல்லி டிரம்மாண்ட், 1500 டாலர்களையும் தனது சுயவிவரத்தையும் அனுப்பிவிட்டு, ஒரு லட்சம் டாலர் கிடைக்கும் என காத்திருந்திருக்கிறார். ஆனால், அது தொடர்பாக எந்தவித டாலரும் அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை.

இதையடுத்து, ஏன் ஒரு லட்சம் டாலர் தனக்கு வரவில்லை என யோசித்த ஷெல்லி டிரம்மாண்ட், டெபோரா பாய்டை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, பேஸ்புக்கில் இருப்பது நான் இல்லை, யாரோ உன்னை மோசடி செய்திருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் டெபோரா பாய்ட்.

இதன் பின்னர் தான் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை டெபோரா பாய்ட் அறிந்து கொண்டார். இதையடுத்து, உடனே தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இது குறித்த தகவலை தெரிவித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மோசடி செய்ய நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் மோசடி செய்யலாம் என்பதால், எந்த விஷயம் என்றாலும் ஆன்லைன் எனும்போது நன்றாக யோசித்து எந்த முடிவையும் எடுப்பது சிறந்தது.

×Close
×Close