Advertisment

”எங்களை காத்தவன் இன்று உயிருடன் இல்லை”- வளர்ப்பு நாய்க்காக உருகும் குடும்பம்!

வீட்டில் உள்ளவர்கள் மறைந்து விட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவதுபோல் நாய்களுக்கும் மரியாதை செய்வது தற்போது பிரபலம் அடைந்திருக்கிறது.

author-image
Vasuki Jayasree
New Update
”எங்களை காத்தவன் இன்று உயிருடன் இல்லை”

”எங்களை காத்தவன் இன்று உயிருடன் இல்லை”

நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதன் காரணமாகவே பல வீடுகளில் மற்ற செல்ல பிராணிகளை விடவும் நாய்களை அதிக அளவில் வளர்க்கும் நாம் நம்

Advertisment

வீட்டில் உள்ளவர்கள் மறைந்து விட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவதுபோல் நாய்களுக்கும் மரியாதை செய்வது தற்போது பிரபலம் அடைந்திருக்கிறது.

அப்படித்தான் கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக அவர்கள் வளர்த்த நாய் திடீரென இறந்து விட அதன் போட்டோவை வைத்து தினமும் மாலை அணிவித்து அதற்கு பிடித்த உணவு  படைத்து வணங்கி வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்த விபரம் வருமாறு;

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓவியக்கலைஞரான இவர் அழிந்து வரக்கூடிய கலையான தஞ்சாவூர் ஓவியம் வரைவதுடன் அதனை பலருக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். தஞ்சாவூர் ஓவியத்தின் சிறப்பை பல நாடுகளுக்கு எடுத்து சென்றும் வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு ராகமாலிகா என்ற மகளும், மனோ என்ற மகனும் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாக செல்லப்பிராணியான கோல்டு ரெட் டிரைவ் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். ஜிஞ்சு என பெயரிட்டு ஏழு வருடங்களுக்கு மேலாக வளர்ந்த அந்த நாய் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தில் ஒருவராக பின்னி பிணைந்து எல்லோர் மனதிலும் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது.

publive-image

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் நாய் ஜிஞ்சு உயிரிழந்ததிருக்கிறது. வீட்டில் ஒருவரை இழந்து தவித்த உணர்வில் குடும்பமே தத்தளித்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இந்தநிலையில் நாய் ஜிஞ்ஜுவின் நினைவாக அதன் போட்டோவை ப்ரேம் செய்து வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் நம்மிடம் பேசியதாவது;  எங்களின் மூன்றாவது பிள்ளையாக ஜிஞ்சுவை வளர்த்தோம். நான் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதேல்லாம் அவன் தான் வீட்டுக்கு பாதுகாப்பு. மனைவி, பிள்ளைகளையும் கவனமாக பார்த்து கொள்வான். நாங்கள் கும்பகோணத்தில் இருந்தாலும் அடிக்கடி சென்னைக்கு செல்வோம். அப்போது அவனையும் காரில் அழைத்து கொண்டு தான் போவோம்.

நாங்கள் சென்னை கிளம்புவது தெரிந்து விட்டால் முதல் ஆளாக காரில் ஏரி உட்கார்ந்து கொள்வான். ஒரு முறை ஜிஞ்சுவை மட்டும் வீட்டில் தனியாக இருக்க வைத்து விட்டு டெல்லிக்கு சென்று விட்டோம். அங்கே போனதும் அவனை பிரிந்து வந்ததையும் தாங்க முடியவில்லை, அவன் தனியாக என்ன செய்வானோ என்ற கவலையும் சேர்ந்துக் கொண்டது.

உடனே, அடுத்த நாளே விமானத்தில் வீட்டுக்கு வந்து விட்டோம். எங்களோட நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் கலந்த அவனுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்வோம்.

ஒரு முறை வீட்டுக்குள் பெரிய பாம்பு வந்து விட்டது.  நானும் வீட்டில் இல்லை. மனைவி பிள்ளைகள் பாம்பை கண்டதும் அலறிக் கொண்டிருக்க ஜிஞ்சு மட்டும் தனி ஆளாக நின்று கத்தியே பாம்பை விரட்டி விட்டான்.

தீபாவளி, பொங்கல் என அனைத்து விசேஷத்துக்கும் அதுக்கும் டிரெஸ் எடுப்போம். இப்படி எல்லாவற்றிலும் அவன் எங்களுடன் கலந்திருந்த அவன் திடீரென ஒரு நாள் உடல் நலக்குறைவால் எங்களை தவிக்க விட்டுட்டு போய் விட்டான். அவன் இல்லாமல் போனதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அழுது புலம்பிய நாங்கள் ஒரு வழியாக தேற்றிக்கொண்டு அவனை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அவன் போட்டோவை பெரிதாக பிரேம் செய்து மாட்டியிருக்கிறோம்.

அத்துடன் தினமும் போட்டோவிற்கு மாலை அணிவிப்பதுடன், விளக்கேற்றி அவனுக்கு பிடித்தமான உணவு ஒன்றையும் படைத்து அவனை தெய்வமாக வணங்கி வருகிறோம். எங்கள் உணர்வில் கலந்த அவன் உயிருடன் இல்லை. எங்களை காத்த அவனுக்கு நாங்கள் செய்கின்ற நன்றிக்கடன் இது தான் என்று நா தழு தழுக்க பேசினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment