Advertisment

நீரிழிவு நோயை தூண்டும் ஃபேட்டி லிவர்; குணப்படுத்தும் வழிகள் என்ன? நிபுணர் விளக்கம்

உண்மையில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஃபேட்டி லிவர் உள்ளது என்று மேக்ஸ் ஹெல்த்கேரின் டாக்டர் அம்ப்ரிஷ் மித்தல் கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Fatty liver can trigger diabetes

அம்பிரிஷ் மிட்டல்

Advertisment

டாக்டர், எனது நீரிழிவு கட்டுப்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது, ஆனால் எனது கல்லீரல் பரிசோதனைகள் அசாதாரணமாக உள்ளன, என்று 50 வயதான அதிக எடை கொண்ட பெண் கூறினார். அவரது அறிக்கைகள் கல்லீரல் நொதிகளின் லேசான உயர்வைக் காட்டியது. பத்து வருடங்களுக்கு முன்பு நான்,  இது ஒரு சாதரண கொழுப்பு கல்லீரல் (fatty liver) இதற்கு கவலைப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருப்பேன்

ஆனால் விஞ்ஞானம் எப்பொழுதும் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது, மேலும் புதிய விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. கொழுப்பு கல்லீரல் பற்றிய நமது பார்வை கடந்த தசாப்தத்தில் பாரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, கல்லீரலில் உள்ள கொழுப்பு பாதிப்பில்லாததாக கருதப்பட்டது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது மிகவும் பொதுவான நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது நாம் உணர்ந்துள்ளோம்.

கொழுப்பு கல்லீரல் (fatty liver) என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது, இது விலா எலும்புக் கூடுக்கு கீழே நமது வயிற்றின் வலது பக்கத்தில் ஒரு பெரிய உறுப்பு ஆகும். இது தாராளமான ரத்த விநியோகத்தைப் பெறுகிறது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க உதவுகிறது மற்றும் நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.

சாதாரணமாக கல்லீரலில் சில கொழுப்பு உள்ளது, இதைவிட அதிகமான கொழுப்பு ஃபேட்டி லிவர் நோயை உருவாக்குகிறது, இது மருத்துவ மொழியில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்று அழைக்கப்படுகிறது.

கல்லீரலில் கொழுப்பு உள்ள அனைவருக்கும் சிக்கல்கள் இருக்காது என்றாலும், இது 5 முதல் 10 சதவீத பாதிப்புகளில் வீக்கத்திற்கு (steatohepatitis or NASH) வழிவகுக்கும், அதைத் தொடர்ந்து ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

ஆனால் கல்லீரலில் உள்ள கொழுப்பு அந்த உறுப்பை மட்டும் பாதிக்காது. இது பல்வேறு உடல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லீரலில் உள்ள கொழுப்பு நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயத்தை அதிகரிப்பது போன்ற கல்லீரலுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.

கல்லீரலில் உள்ள கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதால், கணையம் கடினமாக உழைத்து அதைச் சமாளிக்க முயற்சிக்கிறது, இதனால் படிப்படியாக சோர்வடைகிறது, இது வகை 2 நீரிழிவு நோயின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தவுடன், அவர்களுக்கு ஃபேட்டி லிவர் உருவாகும் அபாயம் அதிகம்.

உண்மையில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஃபேட்டி லிவர் உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும்போது, ​​இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. இது இரண்டு நிலைகளையும் நிர்வகிப்பதை கடினமாக்கும். இந்த நிலை உடல் பருமனுடன் வலுவாக தொடர்புடையது, மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

NAFLD எவ்வாறு கண்டறியப்படுகிறது?

ஃபேட்டி லிவர் ஆரம்ப நிலைகளில் எந்த அறிகுறிகளையும் உருவாக்காது மற்றும் ஈரல் அழற்சி உருவாகும் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும். லிவர் எலாஸ்டோகிராபி சோதனையின் (fibroscan) அதிக பயன்பாடு NAFLD மற்றும் ஃபைப்ரோஸிஸின் அளவைக் கண்டறியும் திறனை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. சோதனை சில நிமிடங்கள் எடுக்கும். சில சந்தர்ப்பங்களில் MRI தேவைப்படலாம், இது மிகவும் துல்லியமானது, ஆனால் அதிக விலை மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். லிவர் பயாப்ஸி மூலம் இறுதி நோயறிதலைச் செய்யலாம், இது மருத்துவ அமைப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படாத ஒரு ஊடுருவும் செயல்முறையாகும்.

NAFLDக்கான சோதனைகளை யார் மேற்கொள்ள வேண்டும்?

எனது மருத்துவ நடைமுறையில், நான் ஆண்டுதோறும் அல்ட்ராசவுண்ட் லிவர் மற்றும் கல்லீரல் செயல்பாடு சோதனைகளை கேட்கிறேன், அதைத் தொடர்ந்து லிவர் ஃபைப்ரோஸ்கேன் இவைகளில் ஏதேனும் அசாதாரணமாக இருந்தால் அல்லது நோயாளி பருமனாக இருந்தால்.

NAFLD எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும்?

உடல் எடையை குறைப்பது முதல் படி. உடல் எடையில் 5 முதல் 10 சதவிகிதம் இழப்பது கல்லீரலின் நிலையை கணிசமாக மேம்படுத்தலாம், மேலும் சில சமயங்களில் அதன் ஆரம்ப நிலைகளில் நிலைமையை மாற்றியமைக்கலாம்.

ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி முக்கியம். காய்கறிகள், பருப்பு மற்றும் பீன்ஸ், முழு தானியங்கள் (ரீஃபைண்ட் செய்யாதவை), நட்ஸ், கோழி மற்றும் மீன் போன்ற மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது, அதே நேரத்தில் இனிப்புகள், வெள்ளை ரொட்டி / மைதா மற்றும் வறுத்த உணவுகள் சிறந்த முறையில் தவிர்ப்பது நல்லது. ஆல்கஹால் NAFLD ஐ மோசமாக்கும் என்பதால் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளில், Pioglitazone பயனுள்ளதாக இருக்கும், ஆனால் எடை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளால் இது பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

GLP1 ஏற்பி (உதாரணமாக, Liraglutide, Dulaglutide, Semaglutide) வழியாகச் செயல்படும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் எடை இழப்புக்கு உதவுவதும் கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

SGLT2 தடுப்பான்கள் என்பது நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு வகையாகும், அவை சிறுநீர் வழியாக இரத்த குளுக்கோஸை வெளியேற்றுவதன் மூலம் செயல்படுகின்றன. GLP1 ஏற்பிகள் வழியாக செயல்படும் மருந்துகளைப் போலவே, SGLT2 தடுப்பான்களும் எடையைக் குறைக்க உதவுகின்றன.

இந்த இரண்டு குழுக்களும் எங்களால் ஆய்வு செய்யப்பட்டு கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் அழற்சி மற்றும் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றில் இந்த மருந்துகளின் நீண்டகால தாக்கம் இன்னும் ஆய்வு செய்யப்படுகிறது.   கொலஸ்ட்ரால் NAFLD உடன் இணைக்கப்பட்டுள்ளதால், சில ஆய்வுகளில் ஸ்டேடின்களின் பயன்பாடும் நன்மை பயக்கும் என்று காட்டப்பட்டுள்ளது.

உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டறியப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி அவசியம். எடை இழப்பு மற்றும் நீரிழிவு நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். சரியான ஆண்டிடியாபெடிக் மருந்தைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் உதவியாக இருக்கும்.

(ஆசிரியர் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment