Advertisment

வெந்தயம், தேன், நெய்… நிறைய நன்மை இருக்கு; எப்படி பயன்படுத்துவது?

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெந்தயம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிலும், வெந்தயம், தேன், நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிடும்போது நிறைய நன்மைகள் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fenugreek, fenugreek benefits, fenugreek benefits for health, fenugreek benefits in covid 19 pandemic situation, வெந்தயம், தேன், நெய், வெந்தயத்தின் பலன்கள், கொரோனா தொற்று நோய், fenugreek benefits leaves benefits, fenugreek honey gee benefits, fenugreek, honey, gee, healthy foods

கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சத்தான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அனைவரும் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெந்தயம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிலும், வெந்தயம், தேன், நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிடும்போது நிறைய நன்மைகள் இருக்கிறது.

Advertisment

இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு வெந்தயம், தேன், நெய் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. வீடுகளில் அன்றாட உணவு பொருள்களில் ஒன்றாக பயன்படுத்தப்படும் வேந்தயம் பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. வெந்தயம் உடல் எடையை குறைப்பதற்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

வெந்தயத்தை உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. வெந்தயம் பற்றியும் கொழுப்பு குறைப்பதற்கு அதன் பயன்பாடு பற்றியும் ஆயுர்வேதத்தில் பல குறிப்புகள் உள்ளன. அதுமட்டுமல்ல, வெந்தயத்தை உட்கொள்வது நினைவாற்றலையும் அதிகரிப்பது தெரியவருகிறது.

வெந்தயத்தை பொடி செய்து, தேன் மற்று நெய்யுடன், எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது. வெந்தயத்தை தூள் செய்து சூடான நீருடன் உட்கொண்டால் வயிற்று பிரச்சினைகளை குணப்படுத்தும்.

வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் பயனுள்ளதாக பரிந்துரை செய்கிறார்கள். வெந்தயத்தை தண்ணீரில் கலந்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பாக ஆனவுடன் அதை வடிகட்டி, சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய கீரை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இரைப்பை குடல் நோய்களுக்கு வெந்தயக் கீரை சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும். அதனால், வெந்தய கீரையை சாம்பார் செய்து உணவாக சாப்பிடலாம்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது. குளிர்காலத்தில் வெந்தய கீரை ரொட்டி மிகவும் ருசியாக இருப்பதோடு, உடல நலத்தையும் பாதுகாக்கிறது.

வீடுகளில் எளிதில் கிடைக்கும் இத்துனை மருத்துவ குணங்கள் உள்ள வெந்தயத்தை, அனைவரும் இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Food Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment