fenugreek benefits in tamil: நீரிழிவு ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். மேலும் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த நோயை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமில்லை. ஆனால் உணவு, உடற்பயிற்சி மற்றும் வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு முழு வாழ்க்கை முறையையும் மாற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நாம் இனிப்புகளைத் தவிர வேறு பலவற்றைத் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட இந்த சிக்கலான நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய பல மருந்துகளை நம்முடைய தாத்தா பாட்டிகளுக்குத் தெரியும்.
அந்த வகையில், வெந்தய விதைகள் சர்க்கரைக்கான ஒரு பயனுள்ள தீர்வாகக் கூறப்படுகிறது. இந்த விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற இரசாயனங்கள் உள்ளன. அவை செரிமானத்தை மெதுவாக்கும். உடலில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்சிவிடும்.

அதே நேரத்தில், வெந்தயம் இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. வெந்தய விதைகள் கசப்பான, வால்நட் போன்ற சுவை கொண்டது. இது பெரும்பாலும் மசாலா கலவைகளிலலும், நம்முடைய அன்றாட சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தய விதைகளை உங்களுடைய அன்றாட டீ-யாகவும் பருகலாம். மேலும் இவற்றின் பொடிகளை தயிருடன் சேர்த்தும் பருகலாம்.

உலர்ந்த ஆம்லா அல்லது நெல்லிக்காய் தூள், மஞ்சள் மற்றும் வெந்தய விதைகளை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு டீஸ்பூன் தண்ணீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம். இது நீரிழிவு நோயை நீக்குகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“