Advertisment

வெதுவெதுப்பான லெமன் நீர் vs வெந்தயம்- சீரகம் தண்ணீர்: காலையில் அருந்த எது பெஸ்ட்?

Best weight loss drinks; Warm lemon water and methi jeera water in tamil: வெந்தயம் - சீரகம் கலந்த நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இது இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fitness drinks tamil: Warm lemon water vs. methi jeera water in tamil

Fitness drinks tamil: ஆரோக்கியமான பானத்துடன் நமது நாளைத் தொடங்குவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது. ஆனால், இந்த பானங்கள் நமது உடலுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவது மிகவும் நல்லது.

Advertisment

அந்த வகையில் நேரடியாக இன்று நாம் பார்க்கவுள்ள பானம் நமது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்றும், இது உங்கள் குடல் ஆரோக்கியத்தில் வேலை செய்வதன் மூலம் அதன் செயல்முறைக்கு உதவுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூடான எலுமிச்சை நீரின் நன்மைகள்

வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை (ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து) குடிப்பது, விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். மேலும், இது வைட்டமின் சி மற்றும் நீரேற்றத்திற்கான சிறந்த பானமாகும். தவிர, மலச்சிக்கலை விடுவிக்கவும், தினசரி மலமிளக்கியாகவும் இந்த அற்புத நீர் செயல்படுகிறது.

publive-image

சூடான எலுமிச்சை நீரின் தீமைகள்

ஆயுர்வேதத்தின் படி, எலுமிச்சையில் உள்ள புளிப்பு உங்கள் செரிமான அமைப்பை எரிக்கிறது. நச்சுகள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைப் பருகுவது முற்றிலும் பாதுகாப்பானது என்றாலும், வைட்டமின் சியின் இயற்கை வளங்கள் சிறுநீரிறக்கியாகச் செயல்படுவதால், நாம் அடிக்கடி சிறுநீர் செல்ல இது வழிவகுக்கும்.

வெந்தயம் - சீரகம் தண்ணீரின் நன்மைகள்

வெந்தயம் மற்றும் சீரகம் (மெத்தி மற்றும் ஜீரா) விதைகளை ஒரு நாள் இரவு முழுதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இவை இருக்கிறது.

publive-image

வெந்தயம் - சீரகம் தண்ணீரின் தீமைகள்

வெந்தயம் மற்றும் சீரகம் தண்ணீர் முழுவதும் பாதுகாப்பானது. சீரக தண்ணீர் இயற்கையில் சூடாக இருக்கும் மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் போன்ற வெப்பமான மாதங்களில் குறைவாக (அல்லது தவிர்க்கப்பட வேண்டும்). உங்கள் செரிமான அமைப்பை குளிர்விக்க கோடை மாதங்களில் சான்ஃப் தண்ணீரை முயற்சி செய்யலாம்.

publive-image

எலுமிச்சை தண்ணீர் மற்றும் வெந்தயம் மற்றும் சீரக தண்ணீர் இரண்டும் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், எலுமிச்சை நீர் ஆண்டு முழுவதும் அதிக செறிவூட்டும் பானமாக இருக்கிறது. எனவே, அதிகபட்ச நன்மைகளைப் பெற இந்த பானங்களை அவ்வப்போது பருகி பயன் பெறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment