Advertisment

உங்கள் சமையலறையில் கழிவுகள் இல்லாததை உறுதி செய்வதற்கான எளிய குறிப்புகள் இதோ!

எந்த முயற்சியும் எடுக்காமல், இந்த எளிய வழிகள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருப்பதையும், சமையலறையில் வீண் விரயம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.

author-image
WebDesk
New Update
Kitchen hacks

Follow these useful tips to ensure zero waste in your kitchen

ஜீரோ வேஸ்ட், இது இன்றைய உலகத்தை மறுவரையறை செய்யும் சொல். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறுவதற்கு, நாம் செய்யக்கூடிய எளிதான விஷயம் இது. தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகள், இரசாயனங்கள் முக்கியமாக காய்கறி மற்றும் பழத்தோல்கள் மற்றும் உலர் கழிவுகளை உள்ளடக்கிய உணவுக் கழிவுகள் என ஏராளமான கழிவுகள் நம் சமையலறையில் இருக்கின்றன. ஆனால், 24 மணி நேரமும் வேலை செய்பவர்களுக்கு ஜீரோ கழிவு கடைபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.

Advertisment

எந்த முயற்சியும் எடுக்காமல், இந்த எளிய வழிகள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருப்பதையும், சமையலறையில் வீண் விரயம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.

உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள்

முடிந்தவரை, உழவர் சந்தையில் இருந்து உள்ளூர் பொருட்களைத் தேர்வு செய்யவும். இது எப்படி உதவும் என்று நீங்கள் யோசிக்கலாம்?  அவர்கள் மூடப்பட்டு அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட புதிய தயாரிப்புகளை வழங்க மாட்டார்கள், அவற்றை நீங்கள் நேரடியாக புதிதாக வாங்கலாம். மேலும் சந்தையில் உணவு பொருட்களை மலிவான விலையில் வாங்கி, பணத்தை மிச்சப்படுத்தலாம்.

பிளாஸ்டிக்கை தவிர்க்கவும்

நீங்கள் மளிகைக் கடைக்கு வெளியே செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை, உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதேபோல்,  உங்கள் சமையலறையில் உணவு சேமிப்புக்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஜாடிகளையும் பெட்டிகளையும் வைத்திருக்கலாம்.

மொத்தமாக ஷாப்பிங்

நீங்கள் மளிகைக் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம், ஒரு பட்டியலைத் தயாரித்து அதற்கேற்ப பேண்ட்ரி பொருட்களை வாங்கவும். இது அதிகப்படியாக உணவுப்பொருட்களை வாங்கி குவித்து, பிறகு பயன்படுத்தாமல் வீணாக்குவதை தடுக்க உதவும்.

சொந்த மூலிகைகளை வளர்க்கவும்

புதினா, கொத்தமல்லி போன்ற ஆர்கானிக், பேக்கேஜ் இல்லாத மூலிகைகளை வாங்கி பாதுகாப்பாக சேமிப்பது மிகவும் கடினம். உங்கள் சமையலறையில் ஜீரோ கழிவுகளை உறுதி செய்ய, உங்கள் சொந்த மூலிகைகளை, சிறிய தொட்டிகளில் வளர்க்கலாம். மேலும் கூடுதல் இடத்தைத் தடுக்க, அவற்றை கவுண்டர்டாப்பில் வைக்கலாம். இது உங்கள் சமையலறைக்கு சிறந்த தோற்றத்தையும் வழங்கும்.

எஞ்சியவற்றைப் பயன்படுத்துங்கள்

உங்கள் சமையலறையில் நீங்கள் புதிய உணவை தயாரிக்கும் போதெல்லாம், எஞ்சிய உணவைப் பயன்படுத்துவதற்கு சிந்திக்க முயற்சிக்கவும். கழிவு இல்லாத சமையலறையை நீங்கள் பின்பற்றுவதற்கான முக்கிய வழிகளில் இதுவும் ஒன்று.

சிறிய தட்டுகளில் சாப்பிடுங்கள்

அடுத்த முறை உணவு உண்ண உட்காரும் போது, ​​ஒரு சிறிய தட்டில் சாப்பிடுங்கள். நீங்கள் உணவை வீணாக்காமல் இருப்பதை, இது உறுதி செய்யும். ஒருவேளை நீங்கள் அதிகமாக சாப்பிட நினைத்தால், நீங்கள் மீண்டும் தட்டில் போட்டுக் கொள்ளலாம்.

உங்கள் ஜாடிகளை மறுசுழற்சி செய்யுங்கள்

சமையலறையில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய ஜாடிகளை வெளியே எடுத்து, நன்றாக கழுவவும். அதை உலர வைத்து, வேறு எந்த உணவையும் சேமிக்க அதை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் அவற்றை உங்கள் தோட்டத்தில் செடி வளர்க்க பயன்படுத்துங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment