Advertisment

உங்க வீட்டு சப்பாத்தி சாஃப்டா வரணுமா? இதுதான் அந்த ரகசியம்

Soft Chapati Making Tamil Video: மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா இணைத்து சாப்பிடுவது ரொம்பவே டேஸ்டியாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
உங்க வீட்டு சப்பாத்தி சாஃப்டா வரணுமா? இதுதான் அந்த ரகசியம்

Food Recipes News In Tamil, Soft Chapati Making Tamil Video: சப்பாத்தி சமையல் இல்லாத வீடு இல்லை. ரேஷன் கடையில் கோதுமையை வாங்கி, திரித்து வைத்துக் கொண்டு பல வீடுகளில் தினம் ஒரு முறை என்கிற அளவுக்குகூட சப்பாத்தி செய்கிறார்கள். சிறுவர்களுக்கு பிடித்தமான உணவு என்பதும் ஒரு காரணம்.

Advertisment

இந்த சப்பாத்தி சாஃப்டாக வரவேண்டும் என அனைவரும் விரும்புவோம். மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா இணைத்து சாப்பிடுவது ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். வயதானவர்களுக்கும்கூட இது ஏற்ற உணவு.

Soft Chapati Making Tamil Video: சாஃப்ட் சப்பாத்தி தமிழ் வீடியோ

சரி... சப்பாத்தியை சாஃப்டாக செய்வது எப்படி? இது சிம்பிள் ரகசியம்தான்.

சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம்.

பிறகு உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும்.

அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.

பின் உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். இந்த முறையில் செய்து பாருங்கள், சாஃப்டான உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சப்பாத்தி ரெடி! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு மகிழுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment