scorecardresearch

14 மாதங்கள் சிறுநீர் கழிக்க முடியவில்லை; ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

ஒரு வாரம் கழித்து நான் சிறுநீரக மருத்துவமனைக்கு உதவிக்காகச் சென்றேன், என்னால் இன்னும் சிறுநீர் கழிக்க முடியவில்லை.

lifestyle
Fowler Syndrome

இங்கிலாந்தைச் சேர்ந்த எல்லே ஆடம்ஸ் என்ற பெண், அக்டோபர் 2, 2020 அன்று கண்விழிக்கும் வரை ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென்று நிறைய திரவங்களைக் குடித்தாலும் சிறுநீர் கழிக்கும் திறனை இழந்தார்.

நான் மிகவும் ஆரோக்கியமாக இருந்தேன். எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நாள் நான் எழுந்தபோது, என்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை.,  தினமும் கழிவறைக்குச் செல்லும் ஒரு எளிய வேலையைக் கூட தன்னால் முடிக்க முடியவில்லை, என்று 30 வயதான ஆடம்ஸ் நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கவலையடைந்த அவர், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார், பரிசோதனைக்குப் பிறகு, அவரது சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர் இருப்பதாகக் கூறப்பட்டது,

அதேசமயம், பொதுவாக, இந்த உறுப்பு பெண்களில் 500 மில்லி சிறுநீரையும், ஆண்களில் 700 மில்லி சிறுநீரையும் வைத்திருக்கும்.

சிறுநீர் கழிக்க உதவுவதற்காக, மருத்துவர்கள் ஆடம்ஸுக்கு ஒரு அவசர வடிகுழாயைக் (emergency catheter) கொடுத்தனர் – சிறுநீர்ப்பைக்குள் செல்லும் இந்த குழாய் சிறுநீரை வெளியேற்றும்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய ஆடம்ஸ், ஒரு வாரம் கழித்து நான் சிறுநீரக மருத்துவமனைக்கு உதவிக்காகச் சென்றேன், என்னால் இன்னும் சிறுநீர் கழிக்க முடியவில்லை, அவர்கள் எனக்கு self catheterize செய்யக் கற்றுக் கொடுத்தார்கள், அதனுடன் வாழக் கற்றுக் கொள்ளச் சொன்னார்கள்.

அவளுக்கு ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் (Fowler’s Syndrome (FS)) இருப்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது.

இது ஒரு அரிய நோய் முக்கியமாக இளம் பெண்களை பாதிக்கிறது, மேலும் சிறுநீர்ப்பையை காலி செய்ய இயலாமைக்கு வழிவகுக்கிறது. இந்த நோய் குறித்த குறைந்த விழிப்புணர்வே உள்ளது, போதுமான ஆராய்ச்சி இல்லை மற்றும் ஏறக்குறைய போதுமான சிகிச்சை விருப்பங்கள் இல்லை, என்று ஆடம்ஸ் அதில் எழுதினார்.

நான் மருந்து, பிசியோ மற்றும் அக்குபஞ்சர் மருத்துவம் ஆகியவற்றை முயற்சித்தேன், எனது சிகிச்சை பயணம் கொடூரமானது. சோதனையில் 20% மேம்பாடுகளை மட்டுமே நான் கண்டேன், எனக்கு வேறு எந்த வழியும் இல்லாததால், நிரந்தர பேட்டரியைச் செருக முடிவு செய்தோம். நான் இப்போது 2 வாரங்கள் கழித்து இருக்கிறேன்.. இது என் வாழ்க்கையை மாற்றவில்லை, ஆனால் அது எளிதாகிவிட்டது. அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், என்று அவள் தொடர்ந்தாள்.

ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய சிறுநீரக நோயாகும், இது முதன்மையாக இளம் பெண்களை பாதிக்கிறது. இதனால் சிறுநீர் கழிக்க அல்லது சிறுநீர்ப்பையை சரியாக காலி செய்ய இயலாமல் போகிறது.

சிறுநீரக மருத்துவர் அப்துல் ஃபதாஹ் கூறுகையில், இடுப்புத் தள தசைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் செயலிழப்பு காரணமாக இது ஏற்படுகிறது, இதன் விளைவாக urethral sphincter மூடப்பட்டு சிறுநீர்ப்பையில் சிறுநீர் தக்கவைக்கப்படுகிறது.

சிறுநீர் தக்கவைத்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் மற்றும் அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது வலி ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்.

காரணங்கள்

இந்த அசாதாரண நோய்க்கான காரணங்களைப் பற்றி டாக்டர் ஃபதேஹ் பேசுகையில், ஃபோலர்ஸ் சிண்ட்ரோம்க்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மரபணு மற்றும் நரம்பு செயலிழப்பு உள்ளிட்ட காரணிகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்த நிலை உளவியல், மன அழுத்தம் அல்லது அதிர்ச்சியால் தூண்டப்படலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

ஃபோலர் நோயை எவ்வாறு கண்டறியலாம்?

urodynamic studies, electromyography, and cystoscopy போன்ற உள்ளிட்ட பல சோதனைகளை ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் கண்டறியலாம்.

யூரோடைனமிக் ஆய்வுகள், சிறுநீர்ப்பையின் செயல்பாடு மற்றும் திறனை மதிப்பிடுகின்றன, அதே நேரத்தில் எலக்ட்ரோமோகிராபி இடுப்பு தள தசைகளின் மின் செயல்பாட்டை மதிப்பிடுகிறது.

சிஸ்டோஸ்கோபி என்பது சிறுநீர்க்குழாய் வழியாக கேமராவுடன் ஒரு மெல்லிய குழாயைச் செருகி, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாயில் ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது அடைப்புகள் உள்ளதா எனப் பரிசோதிப்பதாகும், என்று அவர் விளக்கினார்.

சிகிச்சை

ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் சிகிச்சை, நிலையின் தீவிரம் மற்றும் தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையைப் பொறுத்தது.

லேசான சந்தர்ப்பங்களில், அறிகுறிகளை நிர்வகிக்க சிறுநீர்ப்பை பயிற்சி (self-catheterization and bladder training) போதுமானதாக இருக்கலாம். சிறுநீர்ப்பை செயல்பாட்டை மேம்படுத்த alpha-blockers அல்லது anticholinergics போன்ற மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். மிகவும் கடுமையான நிகழ்வுகளுக்கு, sacral nerve stimulation அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவைசிகிச்சையில் வடு திசுக்களை அகற்றுவது அல்லது பிளேடர் பேஸ்மேக்கரை (bladder pacemaker) வைப்பது ஆகியவை அடங்கும், என்று டாக்டர் ஃபதா கூறினார்.

ஃபோலர்ஸ் சிண்ட்ரோம், அடிக்கடி பலவீனப்படுத்தும் நிலை, இது ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கலாம், அதே நேரத்தில் அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும் சிறுநீர்ப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நோயறிதல் மற்றும் பொருத்தமான சிகிச்சை அவசியம் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.

சிறுநீரக மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட் மற்றும் உளவியலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பலதரப்பட்ட அணுகுமுறை இந்த நிலையின் பல்வேறு அம்சங்களை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு அவசியமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Fowler syndrome inability to urinate in women