Advertisment

இலவச சிலிண்டர்… paytm-இன் சூப்பர் சலுகை!

LPG Cylinder,Paytm,Free Cylinder on Paytm,Free Gas: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் கவலையில் ஆழ்ந்துள்ளவர்களுக்கு paytm இலவச சிலிண்டர் வழங்கும் சலுகையை அறிவித்து மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. பேடிஎம் பயனர்கள் இலவச எரிவாயு சிலிண்டரைப் பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Paytm Announces exciting offers for new users : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் கவலையில் ஆழ்ந்துள்ளவர்களுக்கு paytm இலவச சிலிண்டர் வழங்கும் சலுகையை அறிவித்து மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. பேடிஎம் பயனர்கள் இலவச எரிவாயு சிலிண்டர்களைப் பெறலாம்.

Advertisment

நாளுக்கு நாள் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வால் கவலையில் ஆழ்ந்துள்ளவர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக paytm ம்கிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. எல்பிஜி சிலிண்டரை மலிவாகப் பெறவும் இன்னும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பெற பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.

paytm-இன் பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டரை வெல்வதற்கான வாய்ப்பை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. paytm நிறுவனம் வழங்கும் சிலிண்டரை பெறுவதற்கு, சிலிண்டர் முன்பதிவு செய்யுபோது, கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக ப்ரீ கேஸ் என்ற கூப்பனை நிரப்ப வேண்டும்.

paytm-இன் புதிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலாவது முன்பதிவு பரிவர்த்தனையை செய்யும்போது பிளாட் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்யும்போது பர்ஸ்ட் சிலிண்டர் என்ற புரோமோ கோட்-ஐ பயன்படுத்த வேண்டும்.

இந்த ரீஃபண்ட் சலுகை இன்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி நிறுவனங்களைச் சேர்ந்த சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.

இது மட்டுமில்லாமல், paytm போஸ்ட்பெய்டு என்கிற paytm now pay later சேவையில் பதிவு செய்வதன் மூலம் அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கும் பணம் செலுத்தலாம்.

paytm இல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?

  • முதலில் paytm ஆப்-கு உள்ளே செல்லுங்கள்.
  • paytm ஆப்-இல் ரீசார்ஜ் மற்றும் Bill Payment என்கிற ஆப்ஷனில் புக் கேஸ் சிலிண்டர் என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • எந்த நிறுவனத்திடமிருந்து சிலிண்டர் பெற விரும்புகிறீர்கள் என்பதை அது கேட்கும். அதற்கான பதிலை நிரப்பவும்.
  • இதையடுத்து, பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள்.
  • பின்னர் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை தொடங்கும். இதில், paytm வாலட், paytm யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பணம் செலுத்தலாம். அதேபோல் ப்ரீ கேஸ் என்ற கூப்பன் கோட்-ஐ உள்ளீடு செய்யுங்கள்.
  • உங்களுடைய பண பரிவர்த்தனை முடிந்த பிறகு முன்பதிவு உறுதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து, உங்கள் சிலிண்டர் ஏஜென்சியில் இருந்து உங்கள் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Gas Cylinder Paytm Lpg Gas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment