Advertisment

ரயில் நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை மூலம் படித்து சிவில் தேர்வில் வென்ற கூலி தொழிலாளி ஸ்ரீநாத்!!!

ஒரே நாளில் கேரளா முழுவதும் ஸ்ரீநாத் ஃபேமஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில் நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை மூலம் படித்து சிவில் தேர்வில் வென்ற கூலி  தொழிலாளி ஸ்ரீநாத்!!!

கேரளா மாநிலத்தில்  ரயில் நிலையத்தில் கிடைத்த இலவச வைஃபை மூலம் படித்து சிவில் தேர்வில்  வெற்றி பெற்ற   ரயில்வே தொழிலாளி ஸ்ரீநாத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

சிவில் தேர்வு எழுத தயார் ஆகுவோருக்கு தெரியும்.   எத்தனை புத்தகங்களை புரட்ட வேண்டும்? எத்தனை வருட வினாத்தாளின் உதவிகளை நாட வேண்டும்?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் ? என்பதெல்லாம்.  ஆனால் இவை எவற்றிற்குமே நேரம் ஒதுக்க முடியாமல்  ஒருபக்கம் வேலை செய்துக்  கொண்டே, இலவச வைஃபை மூலம் படித்து  அரசு பணியில் அமரவுள்ள ஸ்ரீ நாத்தை நம்மால் எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

கடந்த 5 ஆண்டுகளாக கேரள மாநிலம், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும்  கூலி தொழிலாளியாக  வேலை செய்து வந்தவர் தான் ஸ்ரீநாத்.  12 ஆம் வகுப்பு படித்து வீட்டு சூழ்நிலையால கூலி தொழிலாளியான இவருக்கு,  நன்கு படித்து உயரிய பதவியில் அமர வேண்டும் என்பது தான் கனவு, லட்சியம் எல்லாமே.

அப்போது தான் ஸ்ரீநாத்தின் கனவுக்கு கைக் கொடுக்க வந்தது ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை திட்டம். மோடி அரசு டிஜிட்டல் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய இந்த திட்டம் ஸ்ரீநாத்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.

ஒருபக்கம் வேலை செய்துக் கொண்டே, மறு பக்கம் காதில் ஹெட்ஃபோன்களை மாற்றிக் கொண்டு ஸ்ரீநாத் ரயில் நிலையத்தை சுற்றி வருவராம். இதைப் பார்ப்பவர்கள் எல்லாம் ”ஒழுங்காக வேலை செய்யாமல் எப்போதும் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று ஸ்ரீநாத்தை திட்டுவார்களாம். ஆனால்,  கொஞ்ச நாள் சென்ற பின்பு தான் தெரிந்ததாம் ஸ்ரீஇநாத் பாட்டு சினிமா பாட்டு கேட்கவில்லை, படித்துக் கொண்டிருக்கிறார் என்று.

ஆம், வங்கும் ஊதியம் வீட்டு செலவிற்கே சரியாக இருக்கும் பட்சத்தில், ஸ்ரீநாத்தினால் எப்படி  சிவில் தேர்விற்கான புத்தகங்களை வாங்கி படிக்க முடியும். அப்படி புத்தகம் கிடைத்தாலும் படிக்க எங்க நேரம் இருக்கிறது. அதனால் தான் ரயில் நிலையத்தில் கிடைக்கும் வைஃபை மூலம்  ஸ்ரீநாத் புத்தகங்களை ஆடியோ மற்றும் டிஜிட்டல் முறையில் தரவிறக்கம் செய்துக் கொண்டு படித்துள்ளார்.

publive-image

நேரம் கிடைக்கும் சமயங்களில் பழைய வினாத்தாள்களையும் டவுன்லோட் செய்துக் கொண்டு இரவில் எழுதி பயிற்சி செய்திருக்கிறார்.  தொடர்முயற்சியின் காரணமாக, கேரளா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்வில் ஸ்ரீநாத்  வெற்றியும் பெற்றுள்ளார்.  கூடிய விரைவில் நில வருவாய் துறையில் ஸ்ரீநாத் உதவியாளராக பணியமர உள்ளது கூடுதல் தகவல்.

இத்துடன் நின்று விடால்  குரூப் டி பணிக்கான தேர்வையும் ஸ்ரீ நாத் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார்.  ரயில்நிலையத்தில் கிடைத்த வைஃபை சிறந்த முறையில் பயன்படுத்தி  தேர்வில் வெற்றி பெற்றுள்ள  ஸ்ரீநாத்திற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் கேரளா முழுவதும் ஸ்ரீநாத் ஃபேமஸ் ஆகியுள்ளார்.

 

 

 

 

 

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment