gabriella charlton age bigg boss gabriella bigg boss tamil : பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிரம்மாண்ட ஓப்பனிங் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இளம் நடிகையான கேப்ரில்லா அசத்தல் நடனத்துடன் அரங்கையே அதிர வைத்து என்ட்ரி கொடுத்தார்.11வது போட்டியாளராக கவர்ச்சி புயலாக கலந்து கொண்ட இவருக்கு நடனம் என்றால் ரொம்ப உயிராம்.
Advertisment
முதல் நாள் பிக் பாஸ் இல்லத்தில், வேல்முருகன், வண்ண நிலவே வருக வசந்த மங்கையே வருக என கவிதையால் கேப்ரில்லாவுக்கு செம வரவேற்பு கொடுத்தார்.
நடிகர் தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் வெளியான 7ஆம் வகுப்பு சி பிரிவு என்கிற டிவி தொடரில் நடித்த இவர், தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் அடுத்த 100 நாட்களுக்கு தாக்குபிடிப்பாரா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.
கேப்ரியலாவும், ஷிவானியும் விஜய் டிவி ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். கேப்ரில்லா ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் கலந்து கொண்டார். தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்தார். விஜய் டிவியில் 2009ம் ஆண்டு ஒளிபரப்பான ஜோனி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னர் ஆனவர் கேப்ரில்லா. இப்போ மீண்டும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள இவர், டைட்டிலை வின் பண்ண நிறைய வாய்ப்புகள் உள்ளது.
நடனம், நடிப்பு மட்டுமில்லை கேபி, ஓவியத்திலும் படு ஸ்மார்ட். இதை அவரே, முதல் நாள் பிக் பாஸ் ஸ்பெஷல் ப்ரோமில் கூறியிருந்தார். கேப்ரில்லா ட்ராக் லவ் ட்ராக்காக செல்ல வாய்ப்பு இருப்பதால ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் கேப்ரில்லாவுக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil