உங்கள் தோட்டத்தில் மரம் செடிகளில் இருந்து விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்.
Advertisment
உதிர்ந்த இலைகள், கரிம தாதுக்களின் வளமான ஆதாரமாக இருக்கின்றன. இதன் காரணமாக, அவை மண் மற்றும் தாவரங்களுக்கு சிறந்த உரத்தை வழங்குகின்றன. எனவே, உங்கள் தோட்டத்தை சுத்தம் செய்வதற்கு முன், மரம் செடி, கொடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த இலைகள், சருகுகளை பயன்படுத்துவதற்கான சிறந்த வழி இங்கே...
இலை உரம் எப்படி செய்வது?
Advertisment
Advertisement
உங்கள் தோட்டத்தில் அங்கங்கே கிடக்கும் இலை சருகுகளை சேகரிக்கவும். அதை மற்ற கரிமப் பொருட்களுடன் கலக்கவும். பொதுவாக ஈரமான, புல் போன்ற பச்சைத் தோட்டக் கழிவுகள் மற்றும் உலர்ந்த பழுப்பு நிற இலைகள் ஆகியவற்றை கலந்து உரம் தயாரிக்கவும். காய்ந்த சருகுகளை நசுக்கி போடுவதால் அவை விரைவாக சிதைந்துவிடும், அவற்றை முழுதாக அப்படியே பயன்படுத்தினால், அவை உரமாக இன்னும் நேரம் எடுக்கும்.
உரம் எப்பொழுதும் ஈரமாக இருக்க வேண்டும், மேலும் சிதைவதற்கு உதவும் ஆக்ஸிஜனை அனுமதிக்கும் வகையில் அதை அடிக்கடி கிளறி விட வேண்டும். இதைச் செய்தால், சில உரங்கள் உண்மையில் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்த தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“