வித்தியாசமான பூண்டு பாயாசம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இது வடஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் காலத்து உணவாகும். புதுவித உணவு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பசும் பால்- 1 லிட்டர்
சர்க்கரை- 3-4 டீஸ்பூன்
குங்குமப்பூ- 1 டீஸ்பூன்
உலர் பழங்கள்- தேவையான அளவு
ஏலக்காய்- சிறிதளவு
பூண்டு- 50-75 கிராம்
செய்முறை
பசும்பாலை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். பால் நுரை வர வர பால் ஏடை ஒதுக்கி ஒதுக்கி கிளறிக்கொண்டே இருங்கள். அடிபிடிக்காமல் பாலை சுண்ட காய்ச்சவும். அதனுடன் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து உலர் பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இப்போது மற்றொரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் பூண்டுகளை சேர்க்கவும். 4 முதல் 5 முறை வேகவைத்து, ஒவ்வொரு முறையும், பழைய நீரை அகற்றிவிட்டு, புது நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது பூண்டை லேசாக நசுக்கி வேகவைத்த பாலில் சேர்த்து 4-5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும். பின்னர் உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் சேர்த்து இறக்கவும். இதை ப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறலாம் அல்லது சூடாகவும் குடிக்கலாம். இதை பூண்டு கீர் என்றும் அழைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“